Political Leaders Diet Plan: பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை - அரசியல் தலைவர்கள் தங்களை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள்? அவர்களின் உணவு முறை மற்றும் யோகா ரகசியங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சி தலைவர்கள் மட்டுமின்றி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர். இனி வரும் நாட்களில் எல்லாம் ஓயாத உழைப்பைத் தேடி கட்சி தலைவர்களும் சரி நிர்வாகிகள், தொண்டர்கள் என்று ஓடி ஓடி உழைக்கும் சூழல் தான். வெயில், மழை என்று கூட பார்க்கலாம் அந்த முதல்வர் நாற்காலியில் அமரப் போகும் ஒருவருக்காக 23 நாட்கள் கட்சி தலைவர்கள் சாப்பிட்டும் சாப்பிடாமல் தங்களது வேலையில் ரொம்பவே பிஸியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
29
தேர்தல் பிரச்சார டயட், Election Campaign Diet Plan
இந்த சூழலில் தான் அவர்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள், அவர்களது உணவு பழக்க வழக்கம், டயட் பற்றி விரிவாக பார்க்கலாம். அரசியல் களத்தில் ஒரு தலைவர் சந்திக்கும் சவால்களை விட, அவர் தனது உடல்நலத்தைப் பேண எடுக்கும் முயற்சிகள் மிகவும் சுவாரஸ்யமானவை. அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓயாத உழைப்பு, இடைவிடாத பயணங்கள், மேடைப் பேச்சுகள் என இயங்கும் தலைவர்களின் 'டயட்' மற்றும் வாழ்க்கை முறை குறித்த தொகுப்பு தான் இது.
39
அரசியல் தலைவர்களின் உணவு முறை
அரசியல்வாதிகள் என்றாலே எப்போதும் பரபரப்பாக இருப்பவர்கள். அவர்களின் ஒரு நாள் பொழுது எப்படித் தொடங்குகிறது? அவர்கள் எதைச் சாப்பிடுகிறார்கள்? 70 வயதைத் தாண்டியும் பிரதமர் மோடி காட்டும் சுறுசுறுப்பு வியப்பிற்குரியது. தினமும் காலை 5 மணிக்கே எழுந்து யோகா மற்றும் பிராணாயாமம் செய்வது அவரது வழக்கம் என்று கூறப்படுகிறது. மிகவும் எளிமையான குஜராத்தி உணவுகள். குறிப்பாக கிச்சடி அவருக்கு மிகவும் பிடிக்கும். பயணங்களின் போது வெறும் வெதுவெதுப்பான நீரை மட்டுமே அருந்துவார் என்றும் சொல்லப்படுகிறது.
49
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்: ஜிம் மற்றும் சைக்கிளிங்
தமிழக அரசியலில் 'பிட்னஸ் ஐகான்' என்று இவரைச் சொல்லலாம். தினமும் காலையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது அல்லது கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். எண்ணெய் மற்றும் காரம் குறைந்த வீட்டு உணவுகள். இரவு நேரங்களில் மிகவும் லேசான உணவுகளையே (Light Dinner) எடுத்துக்கொள்கிறார்.
நடிகரும், அரசியல்வாதியுமான விஜய் எப்போதும் மிகவும் எளிமையான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறார். அதற்கேற்ப உடற்பயிற்சியும் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நடிகர் அல்லவா, எப்போதும் தனது உடல்நலனில் அக்கறையும் எடுத்துக் கொள்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அதிகளவில் உணவு எடுத்துக் கொள்வதில்லை. அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் மிகவும் எளிய உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதோடு நடைபயிற்சியும் மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது.
79
ராகுல் காந்தி: டிரெக்கிங் மற்றும் தற்காப்புக் கலை
ராகுல் காந்தி ஒரு தீவிரமான விளையாட்டுப் பிரியர். 'அய்க்கிடோ' (Aikido) எனும் தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர். புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் விரும்புவார். நீண்ட நடைப்பயணங்களின் (Yatra) போது கூட அவர் சோர்வடையாமல் இருக்க இதுவே காரணம்.
89
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எப்போதும் ஜிம் ஒர்க் அவுட், எளிய உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறார். நடைபயிற்சியும் மேற்கொள்கிறார். இது தான் அவரது ஃபிட்னெஸிற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பிரச்சார காலங்களில் அதிகளவில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதாக வாடிக்கையாக கொண்டுள்ளாராம்.
பிரச்சார காலங்களில் தலைவர்களின் 'ஸ்பெஷல் டயட்'
தேர்தல் நேரங்களில் தலைவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் நீர்ச்சத்து குறைபாடு. பெரும்பாலான தலைவர்கள் வெயிலைச் சமாளிக்க இளநீர், மோர் மற்றும் எலுமிச்சை சாற்றையே நம்பியுள்ளனர். எளிதில் செரிமானமாகும் ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களை வாகனத்திலேயே வைத்திருப்பார்களாம்.
99
அரசியல்வாதிகளிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள்
எவ்வளவு வேலை இருந்தாலும் உடற்பயிற்சிக்கு ஒதுக்கும் அந்த ஒரு மணி நேரம். விருந்துகளுக்குச் சென்றாலும் தங்களுக்குத் தேவையானதை மட்டும் அளவாக உண்பது. விமர்சனங்களையும் அழுத்தங்களையும் கையாள அவர்கள் மேற்கொள்ளும் தியானம் ஆகியவற்றை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.