போட்டி போடும் தக்காளி, வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்ததா.?

Published : Aug 07, 2025, 07:35 AM IST

சமீபத்தில் உயர்ந்த தக்காளி, வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி 4 கிலோ 100 ரூபாய்க்கும், வெங்காயம் 4 கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது.

PREV
15
சமையலும் காய்கறிகளும்

சமையலில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை சுவை, ஊட்டச்சத்து, மற்றும் ஆரோக்கியத்தை வழங்குகின்றன. குறிப்பாக பல்வேறு சுவைகளான இனிப்பு, காரம், புளிப்பு ஆகியவற்றை சேர்க்கின்றன. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவை அடிப்படை சுவையை உருவாக்குகின்றன, மற்ற காய்கறிகள் உணவுக்கு தனித்துவமான சுவையை அளிக்கின்றன. 

எனவே அசைவமாக இருந்தாலும், சைவமாக இருந்தாலும் காய்கறிகள் சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில், மற்ற காய்கறிகளை விட தக்காளி மற்றும் வெங்காயத்தை மக்கள் அதிகளவு வாங்கி செல்வார்கள். எனவே தக்காளி வெங்காயத்தின் விலை அதிகரித்தால் ஏழை எளிய மக்களின் நிலைமை திண்டாட்டம் தான்.

25
ஏறி இறங்கும் தக்காளி, வெங்காயம் விலை

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயை தாண்டியது. இதற்கு போட்டியாக பெரிய வெங்காயமும் சரசரவென உயர்ந்து ஒரு கிலோ 120 ரூபாயை தொட்டது,. இதனால் பை நிறைய வாங்கி செல்ல முடியாமல் கை நிறைய மட்டுமே வாங்கும் நிலை ஏற்பட்டது. எனவே இந்த இரண்டு காய்கறிகளின் விலை எப்போது குறையும் என மக்கள் காத்திருந்தனர். 

அந்த காத்திருப்பிற்கு பதில் கிடைக்கும் வகையில் வெங்காயம் மற்றும் தக்காளி வரத்து அதிகரித்தது. இதனால் காய்கறி சந்தையில் மூட்டை மூட்டையாக, பெட்டி பெட்டியாக தக்காளி, வெங்காயம் குவிந்தது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது. வெங்காயத்தின் விலையும் குறைந்ததுஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையானது.

35
ஒரு கிலோ தக்காளி எவ்வளவு.?

இந்த நிலையில் கடந்த வாரம் தக்காளி விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி 45 முதல் 60 ரூபாயை தொட்டது. வெங்காயத்தின் விலையும் சற்று உயர்ந்தது. இந்த நிலையில் இன்று தக்காளியின் விலை குறைய தொடங்கியுள்ளது. சிறிய அளவிலான தக்காளி 100 ரூபாய்க்கு 4 கிலோ விற்பனை செய்யப்படுகிறது. சற்று பெரிய அளவிலான தக்காளி 3 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பெரிய வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. சற்று சிறிய அளவிலான வெங்காயம் 100 ரூபாய்க்கு 5 கிலோவும், நல்ல தரமான வெங்காயம் 100 ரூபாய்க்கு 4 கிலோவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அதிகளவிலான தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள்.

45
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?

இந்த நிலையில் பச்சை காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், 

பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒன்று பத்து ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

55
உயரும் இஞ்சி விலை

அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,

 கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Read more Photos on
click me!

Recommended Stories