பவுர்ணமி நாளில் வரும் ஆடி வெள்ளி மற்றும் திருவோணம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் வழக்கத்தை விட திருவண்ணாமலைக்கு அதிக பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கிரிவலம் நாளன்று விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரம்-திருவண்ணாமலை ரயில்
அதாவது 9ம் தேதி இயக்கப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயில் (வண்டி எண்: 06130) விழுப்புரம் சந்திப்பில் இருந்து காலை 09:25 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலையை காலை 11:10 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்னாமலையில் இருந்து மதியம் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இந்த ரயில் வெங்கடேசாபுரம், மாம்பழப்பட்டு, அய்யந்தூர், திருக்கோயிலூர், ஆதிச்சனூர், ஆண்டம்பாளையம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.