ஒரு ரூபாய் செலவு இல்லை..! இலவசமாகவே அறுபடை முருகன் கோயில் சுற்றுலா.! அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு!

Published : Aug 06, 2025, 04:08 PM IST

தமிழக அரசு, 60 முதல் 70 வயதுக்குட்பட்ட 2,000 மூத்த குடிமக்களை அறுபடை வீடுகளுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வருமானச் சான்றிதழ், மருத்துவச் சான்று மற்றும் ஆதார் நகலுடன் விண்ணப்பிக்கலாம்.

PREV
15

இந்தியாவிலேயே அதிக கோயில்களை கொண்ட மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. அந்த வகையில் ஆன்மிக மக்கள் அதிகமாக விருப்பப்படும் இராமேஸ்வரம் காசி ஆன்மிகப் பயண திட்டத்தையும் தமிழக அறநிலையத்துறை செயல்படுத்து வருகிறது. இந்நிலையில் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மீக பயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

25

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருவதோடு, ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும், இராமேசுவரத்திலிருந்து காசிக்கும் அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

35

2025 2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 பக்தர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

45

ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும். 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் சுகதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன் ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 15.09.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

55

அறுபடைவீடு ஆன்மிகப் பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, இந்த ஆன்மிகப் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories