Onion Price : மூட்டை, மூட்டையாக வெங்காயம்.! பை நிறைய அள்ளும் மக்கள்- ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?

Published : Jul 16, 2025, 07:55 AM ISTUpdated : Jul 16, 2025, 08:18 AM IST

கடந்த ஆண்டு உச்சத்தை தொட்ட வெங்காயம், தக்காளி விலை தற்போது சரிந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிற காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது.

PREV
14
சமையலில் தக்காளி, வெங்காயம்

வெங்காயமும், தக்காளியும் சமையலில் இன்றியமையாதது. இந்த இரண்டு காய்கறிகள் தான் சமையலுக்கு பெயர் பெற்றது. தக்காளி மற்றும் வெங்காயம் இல்லையென்னால் சமையல் ருசியை கொடுக்காது. எனவே காய்கறி சந்தையில் எந்த காய்கறிகளை மக்கள் வாங்குகிறார்களோ, இல்லையோ கண்டிப்பாக வெங்காயமும், தக்காளியையும் பை நிறைய வாங்குவார்கள். 

அந்த வகையில் கடந்த ஆண்டு வெங்காய விளைச்சல் பெரிய அளவில் குறைந்ததால் காய்கறி சந்தைக்குவெங்காய வரத்து குறைந்தது. இதனால் ஒரு கிலோ150 முதல் 180 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

24
உச்சத்தை தொட்ட தக்காளி, வெங்காயம்

இதே போல தக்காளி விளைச்சலும் குறைந்ததால் விலை உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ இரட்டை சதத்தை தொட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகள் சமையலில் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் சமைக்க தொடங்கினார்கள். பை நிறைய வாங்கி சென்ற மக்கள் கை நிறைய மட்டுமே வாங்கும் நிலை உருவானது. எனவே எப்போது விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு கடந்த சில மாதங்களாக ஜாக்பாட் மாதமாக உள்ளது. 

அந்த அளவிற்கு தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சரசரவென குறைந்தது. ஒரு கிலோ வெங்காயம் 150 ரூபாயில் இருந்து 25 ரூபாய்க்கு குறைந்தது. இதே போல தக்காளியின் விலையும் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளி விலை ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது

34
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?

.அதே நேரம் பச்சை காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கூடை நிறைய காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், 

புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

44
சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை

காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், 

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Read more Photos on
click me!

Recommended Stories