
ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் வேலை தேடி சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள். குடும்ப சூழ்நிலை, வருமானம் உள்ளிட்ட காரணங்களுக்காக இடம்பெயர்ந்து வருகிறார்கள். அதிலும் படித்த படிப்பிற்கு வேலை வேண்டும் என்பதற்காகவே வெளியூர்களில் தங்கி பணிக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக வெளிநாட்டு தொழில்நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. அந்த வகையில்,
வெளியூர்களுக்கு சென்று வேலை தேடாமல் சொந்த ஊரிலேயே தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வருகிற சனிக்கிழமை (19.7.2025) 33 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் 19.07.2025 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை புனித அன்னாள் கலை & அறிவியல் கல்லூரி, திண்டிவனம் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாகவும், இதன் மூலம் சுமார்20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை பதிவு, அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவு, இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய வழிகாட்டுப்படவுள்ளாதகவும் கூறப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் இல்லையெனவும் அறிவிக்கப்படுள்ளது.
கல்வித்தகுதிகள்
8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை /ஐ.டி.ஐ.,/ டிப்ளமோ/நர்சிங் /பொறியியல்
மேலும் விவரங்களுக்கு
உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம் : 04146-226417, 9499055906
இதே போல மாபெரும் தனியார்துறை ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இராணிப்பேட்டை மாவட்டத்தில் 19,07,2025 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை இராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி MBT ரோடு, WALAJA TOLLGATE தென்கடப்பந்தாங்கல், வாலாஜாபேட்டை- 632513, வளாகத்தில் நடைபெறும்.
சிறப்பு அம்சங்கள்
100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்
கல்வித்தகுதிகள்
* 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ ஐ.டி.ஐ.,/ டிப்ளமோ/ நர்சிங் /பொறியியல்
அனுமதி இலவசம்
மேலும் விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், இராணிப்பேட்டை : 09488466468 / 9952493516
அடுத்ததாக திண்டுக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், நீங்கள் வேலை தேடுபவரா? திண்டுக்கல்லில் ஜூலை 19ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3,00 வரை இடம் : திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று 3,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, நர்சிங் மற்றும் பொறியியல் படித்த இளைஞர்கள் பங்கேற்று தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் சான்றிதழ்கள்:
கல்விச்சான்று
குடும்ப அட்டை
ஆதார்அட்டை
ஓட்டுநர் உரிமை அடையாள அட்டை
சுய விவரக் குறிப்பு
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 33 பேருக்கு சொந்த ஊரில் வேலை கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.