EPS Amit Shah meeting : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முதல் இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. எனவே இந்த கூட்டணி வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக திமுக கூட்டணி
அதே நேரம் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பல்வேறு குழப்பமான நிலை நீடிக்கிறது.
யார் எங்கிருக்கிறார்கள், யாருடன் கூட்டணி என்ற நிலைப்பாடு தெளிவு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் திமுகவை எதிர்க்க அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்கு ஏற்றார் போல நடிகர் விஐய்யின் தவெக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டணியை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டணிக்கு நோ சொன்ன விஜய்.! பாஜகவோடு இணைந்த அதிமுக- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
கண்டுகொள்ளாத தவெக- மீண்டும் பாஜக கூட்டணி
ஆனால் விஜய் கூட்டணிக்கு உடன்பட்டு வராத காரணத்தால் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கை கோர்த்துள்ளது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக பாஜகவிற்கு எதிரான கருத்துகளை கூறி வந்த எடப்பாடி தற்போது திமுகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கப்படும் என தெரிவித்தார்.
அந்த வகையில் நேற்று டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம், முனுசாமி ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு
அப்போது ஒன்றினைந்த அதிமுக இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் எனவும், ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாக மறுத்துள்ளார். இவர்கள் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லையென கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க மாட்டோம் எனவும், அப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் அதிமுக உறுப்பினராக ஆகிவிடுவார்கள்.
இரட்டை இலை சின்னம்
எனவே பாஜகவின் தாமரை சின்னத்தில் வேண்டும் என்றால் போட்டியிடட்டும் என இபிஎஸ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்ததாக தொகுதி பங்கீடு தொடர்பாக தேர்தல் சமயத்தில் ஆலோசனை மேற்கொள்ளலாம் எனவும், கூட்டணியை பொறுத்தவரை பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்கலாம் என ஆலோசித்ததாக தகவல் கூறப்படுகிறது.