
தமிழக அரசு சார்பாக மகளிர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் சொந்த காலில் முன்னேறவும், யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வதற்கு வழிவகுக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமை தொகையானது தமிழகத்தில் வெற்றிகரமான திட்டமாக உள்ளது.
இந்த திட்டமானது கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தொடங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 1.63 கோடி பேர் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தனர், இதனையடுத்து 1.15 கோடி பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையைப் பெற்று வருகின்றனர். அதே நேரம் பல்வேறு காரணங்களுக்காக சுமார் 60 லட்சம் பேருடைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்கு எப்போது மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை 15, 2025) முதல் அக்டோபர் அல்லது நவம்பர் 2025 வரை 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் 13 துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், கிராமப்புறங்களில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இந்த முகாம்களில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு மக்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மகளிர் உரிமை தொகை பெறுவதற்காகவே உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை பெறுவதற்கான ஆவணங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குதியுள்ள / விடுபட்ட மகளிர், முகாமில் வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அளிக்கவும்)
21 வயது நிரம்பிய மகளிராக இருக்க வேண்டும் ஏற்கனவே குடும்பத்தில் எவரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும் 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள். ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்/பராமரிப்பு உதவித்தொகை/ முதியோர் ஓய்வூதியம்/முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்/அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய முதியோர் ஓய்வூதியம், இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள். ஆதரவற்ற/கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் நபர்களை தவிர அக்குடும்பத்தில் மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர் /வருமான வரி/தொழில்வரி செலுத்துபவர்/ரூ.50 இலட்சத்திற்கு மேல் ஆண்டு விற்பனை செய்து GST செலுத்துபவராக இருக்கக்கூடாது. குடும்ப உறுப்பினர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கக் கூடாது (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர) சொந்தப் பயன்பாட்டுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது. (அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கரம் வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்)
அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கி ஊழியர்கள் / வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் / கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்களாக இருக்கக் கூடாது சிறப்பு கால முறை ஊதியம் (Special Time Scale) பெற்று பணியாற்றி தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர் தவிர அக்குடும்பத்தில் இருக்கும் மற்ற தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
- குடும்ப அட்டை-ஆதார் அட்டை வங்கிக் கணக்கு புத்தகம் மின் கட்டண ரசீது
தகுதிகள் | தேவைப்படும் ஆவணங்கள்
முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
ஒரு பெண் குழந்தை எனில் மூன்று வயதுக்குள்ளும் 2 பெண் குழந்தை எனில் 2-வது பெண் குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
பெற்றோர்கள் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் வசிப்பவராக இருத்தல் வேண்டும், முகாம் வாழ் இலங்கை தமிழரின் பெண் குழந்தைகளும் பயன்பெறலாம்.
இருப்பிடச் சான்று சாதிச் சான்று பிறப்புச் சான்று வருமான சான்று (உச்ச வரம்பு ரூ.1,20,000) ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று 40 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த சான்று
ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதி ஆதரவுத் திட்டம்
ஆதரவற்ற குழந்தைகள்(பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).
கைவிடப்பட்ட குழந்தைகள்(பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்றுவிட்டால்) ஆதரவு தேவைப் படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இருந்து மற்றொரு பெற்றோர் உடல் ரீதியாவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் / சிறையில் இருந்தால் / உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்துவந்தால்)
குடும்ப அட்டைநகல் குழந்தையின் ஆதார் அட்டை நகல் குழந்தையின் வயது சான்று நகல் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்