அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த சில நாட்களாக தமிழக அரசு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அரசு ஊழியர்களை கவரும் விதமாக அவர்களின் பல நாள் கோரிக்கைகளை ஏற்று பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதாவது அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தியது, அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.