அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்
கடந்த வாரம் கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுகுமார் ஆகியோர் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன்.
2016 இல் முதன்முதலாக ஒரத்தூர் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் 2019 இல் விக்கிரவாண்டி தொகுதி செயலாளர் 2021 விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் ஆகவும் 2024 விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 உள்ளாட்சி தேர்தலில் நானும் என் மனைவியும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராகவும் இருந்தோம். .