மகளிர் உரிமை தொகை 1000 எப்போ கிடைக்கும்? புதிய தகவல்!!

First Published Oct 7, 2024, 7:36 PM IST

Magalir Urimai Thogai : புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகைக்கான 1000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்கின்ற விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

CM Stalin

தமிழகம் முழுவதும் புதிதாக ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு, தற்பொழுது அதை வழங்கும் பணி விறுவிறுப்பாக தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு ஏற்கனவே புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்த பலருக்கும் ஏற்கனவே அவை துரிதமாக வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் புதிதாக ரேஷன் கார்டு பெற்ற குடும்ப தலைவிகள், தங்களுக்கான மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்கின்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 சொளையா; இப்பவே அப்ளை செய்யுங்க அள்ளிட்டு போங்க!

Magalir urimai thogai scheme

இந்நிலையில் இம்மாதம் வழங்கப்பட வேண்டிய மகளிர் உரிமைத் தொகை, இந்த வாரத்தில் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காரணமாக தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு வழங்கும் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் ரேஷன் கார்டுக்காக வந்த நிலையில், அந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இப்போது இரண்டு லட்சத்திற்கும் அதிகமான புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

Latest Videos


CM Stalin

மேலும் இந்த மகளிர் உரிமை தொகைக்கு சில பெண்கள் தகுதி உள்ளவர்களாக இல்லை என்று கூறப்பட்டது. மேலும் அவருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதை பற்றியும் நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் கார்ப்பரேஷனில் பணிபுரியும் ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள் என்று, அந்த காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட சில பெண்களுக்கு, இப்போது இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே அரசு துறையில் பணியாற்றி அதன் மூலம் பென்ஷன் பெற்று வரும் பெண்களுக்கும் இந்த உரிமை தொகை வழங்கப்படவில்லை.

Magalir Urimai Thogai

அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, அதன் மூலம் பென்ஷன் பெறக்கூடிய பெண்கள். அல்லது அரசின் வேறு வகையான நிதிகளை வங்கியிலிருந்து பெறக்கூடிய பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆவணங்களில் குளறுபடி ஏற்பட்டு, அதன் மூலம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கும், புதிதாக திருமணமாகி குடும்ப தலைவிகளாக மாறும் பெண்கள் அளிக்கும் விண்ணப்பங்களும் எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

School Holiday: 13ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை! எதற்காக தெரியுமா?

click me!