தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து செப்டம்பர் 28ம் தேதி அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.
25
Dominic Savio Matriculation Hr. Sec. School
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் டொமினிக் சேவியர் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை ஒட்டி மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
35
Metro Work
இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பள்ளி வளாகத்தில் பல்வேறு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் இதுதொடர்பாக தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து இன்று மாணவர்களின் பெற்றோர் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியது மட்டுமல்லாமல் பள்ளி முதல்வரிடம் இதுகுறித்து தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு இன்று காலை திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெற்றோர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளியில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் உறுதிய அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
டொமினிக் சேவியர் மெட்ரிக் பள்ளிக்கு விஜயதசமி முடியும் வரை அதாவது வரும் 13ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதுவரை 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும். 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.