Chennai Airshow: மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி! போக்குவரத்து மாற்றம்! பார்க்கிங் விவரம்! எம்டிசி அதிரடி!

First Published | Oct 5, 2024, 2:20 PM IST

Chennai Airshow: இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. 15 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற  உள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம் உள்ளிட்டவையும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. 

இந்த நிகழ்ச்சியை காண 15 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் நாளை சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து காவல்துறை தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Tap to resize

போக்குவரத்து மாற்றங்கள்

காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அண்ணா சிலையிலிருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை டி.டி.கே. சாலை ஆர்.கே.சாலை அண்ணாசாலையை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

no parking

வாகனங்கள் நிறுத்துமிடம்:

இந்த நிகழ்ச்சிகளை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு காமராஜர் சாலையில் கடற்கறை சாலை விஐபி- விவிஐபி கார் பார்க்கிங், பிரசிடன்சி கல்லூரி, சுவாமி சிவானந்த சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி (நீல வண்ண பாஸ் மட்டும்) வாகனங்களை நிறுத்தலாம். சாந்தோம் சாலையில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி, செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப் பள்ளி, புனித சாந்தோம் பள்ளி, செயின்ட் பெட்ஸ் மைதானம், கதீட்ரல் ஆரம்ப பள்ளி, சமுதாய கூடம், சாந்தோம், லூப் ரோடு (ஒரு பக்க பார்க்கிங்) ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.

ஆர்.கே.சாலையில் எம்ஆர்டிஎஸ்- லைட் ஹவுஸ் சாலை, என்கேடி பள்ளி (ஐஸ் ஹவுஸ் சந்திப்பு), குயின் மேரிஸ் கல்லூரி, புனித எபாஸ் பள்ளியிலும், வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு), விக்டோரியா விடுதி மைதானம், அண்ணாசாலையில் தீவுதிடல் மைதானம், பொதுப்பணித்துறை மைதானம் (செயலகம் எதிரில்), மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, எம்.ஆர்.டி.எஸ் சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.

மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு நாளை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமானப்படை சாகச் நிகழ்வுகளை காண வரும் பொதுமக்களின் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 8 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும், அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் (Small Bus) இயக்கப்பட உள்ளது.

அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகளும், அதேபோல், டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம்.தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த பேருந்து வசதியினை பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Latest Videos

click me!