மேலும் திமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி இந்த விவகாரத்தில் விஜய்யை குற்றம்சாட்டிய நிலையில், அதிமுகவும், பாஜகவும் ஆதரவாக நின்றது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கரூர் விவகாரத்தில் விஜய் பக்கம் நின்று திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் தவெக தொண்டர்கள் இபிஎஸ்ஸை புகழ்ந்து தள்ள ஆரம்பித்தனர்.
அதிமுக, தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி
இபிஎஸ் பங்கேற்கும் பிரசார கூட்டங்களில் தவெக கொடியுடன் சாரை சாரையாக சென்றனர். இதனால் அதிமுக, தவெக கூட்டணியில் இணைய உள்ளதாக பேச்சுகள் அடிபட்டன. மேலும் அதிமுக பிரசார கூட்டத்தில் தவெக கொடி பறந்த நிலையில், 'வலிமையான கூட்டணி அமைய உள்ளது. பிள்ளையார் சுழி போட்டாச்சு' என தவெக கொடியை பார்த்து இபிஎஸ் சொன்னது அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.