ராமேஸ்வரம், நாகை கடல் பகுதியில் கப்பல் பயணம்.! அசத்தலான அறிவிப்பை சொன்ன அமைச்சர் எ வ வேலு

Published : Oct 29, 2025, 01:33 PM IST

ராமேஸ்வரம் மற்றும் நாகை கடல் பகுதிகளில் படகுப் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். மேலும், ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து தொடங்கவும் திட்டம்

PREV
14

ராமேஸ்வரம் மற்றும் நாகை கடல் பகுதிகளில் படகுப் போக்குவரத்து தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக மும்பையில் நடைபெற்ற இந்திய கடல்சார் வார விழாவில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மும்பையில் நடைபெற்ற இந்திய கடல்சார் வார விழா – 2025ல் தமிழ்நாட்டின் சார்பாக நடைபெற்ற மாநில அமர்வில், அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

அப்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் கடல் சார் திட்டங்கள் தொடர்பாகவும், புதிய திட்டங்கள் தொடர்பாகவும் விவரிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு, 1,069 கிலோ மீட்டர் நீளமான கடற்கரை கொண்ட இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரை மாநிலமாக விளங்குகிறது.

24

மாநிலத்தில் 3 முக்கிய பெருந்துறைமுகங்கள் (சென்னை, தூத்துக்குடி, எண்ணூர்) மற்றும் 17 சிறுதுறைமுகங்கள், பல தொழிற்பூங்காக்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அங்கு சரக்கு ஏற்றுமதி, மீன்பிடி, கப்பல் கட்டுதல், மறுசுழற்சி, கடல்சார் சுற்றுலா போன்ற துறைகளில் தமிழ்நாட்டை முக்கிய மையமாக மாற்றியுள்ளன.

“ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி வரும் நிலையில், கடல்சார் துறையின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

34
  • கடலூர் துறைமுகம் — தனியார் முதலீட்டுடன் 40 ஆண்டுகளுக்கு பிறகு இயக்க நடவடிக்கை.
  • இராமேஸ்வரம் தீவுப் பகுதி — கடல் மார்க்க படகுப் போக்குவரத்து தொடங்குதல்.
  • இராமேஸ்வரம் (இந்தியா) - தலைமன்னார் (இலங்கை) இடையே குறைந்த தூர பன்னாட்டு கப்பல் போக்குவரத்து திட்டம்.
  • கன்னியாகுமரி — விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டது.
  • உடன்குடி — தமிழ்நாடு மின்வாரியத்திற்குத் தேவையான நிலக்கரி கையாள 8 கி.மீ. நீள அணுகு தோணித்துறை அமைப்பு.
  • கடலூர் — கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
  • தரங்கம்பாடி – நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி இடையே பயணிகள் படகு போக்குவரத்து தொடங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
44

தமிழ்நாடு முதலமைச்சர் பன்னாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு வரவேற்கும் நோக்கில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, தமிழ்நாட்டின் தொழில்துறை வாய்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்த முயற்சிகளால், தமிழ்நாடு இந்தியாவில் முதலீட்டுக்கு மிகுந்த உகந்த மாநிலமாக திகழ்கிறது.

கடல்சார் முன்னேற்றத்தில் தமிழ்நாட்டின் பங்கினை வலியுறுத்தல் தமிழ்நாடு கடல்சார் துறையில் தொழில்நுட்பம், மனிதவளம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் சிறந்த முன்னேற்றம் பெற்று வருகிறது. இந்தியாவை உலகின் கடல்சார் மையமாக மாற்றும் பயணத்தில், தமிழ்நாடு உறுதுணையாக இருந்து, முன்னுதாரணமாக செயல்படும் உறுதியை தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories