தவெகவில் புதிய நிர்வாக குழு! லிஸ்ட்டில் விஜயின் வலதுகரம் மிஸ்சிங்! ஒரம் கட்டப்படுகிறா?

Published : Oct 29, 2025, 11:38 AM ISTUpdated : Oct 29, 2025, 11:55 AM IST

கரூர் சம்பவத்திற்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையால் கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்த நிலையில், கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் பெயரில்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
15
தமிழக வெற்றிக் கழகம்

கரூர் கூட்ட நெரிசல் 41 உயிரிழந்த சம்பவத்தை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் முடங்கியது. இதை வைத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்படவர்களை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்ததால் மனதில் இருந்த பாரத்தை விஜய் இறங்கி வைத்ததை அடுத்து திமுக அரசுக்கு எதிராக பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். இதனால் தவெக தொண்டர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்தனர்.

25
தவெக 28 பேர் கொண்ட நிர்வாகக் குழு

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாட பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். அதில் தவெக பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், துணைப் பொதுச்செயலாளர்கள் ராஜ்மோகன், விஜயலட்சுமி, ராஜசேகர், அருள்பிரகாசரம் என அனைத்து தலைமை கழக நிர்வாகிகள் பெயரும் இடம் பெற்றுள்ளது.

35
கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன்

மேலும் அரியலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், கோவை மாநகர மாவட்ட செயலாளர் சம்பத்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜகோபால் மற்றும் மரிய வில்சன் ஆகியோருக்கும் நிர்வாகக் குழுவில் உள்ளனர்.

45
பொருளாளர் வெங்கட்ராமன்

ஆனால் தவெகவின் தலைமை கழக முக்கிய பதவியான பொருளாளரான வெங்கட்ராமனுக்கு, நிர்வாகக் குழுவில் இடம் பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் பொருளாளராக மட்டுமல்லாமல் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே அவரது அனைத்து சொத்து விவரங்கள், வரவு செலவு கணக்கு விவரங்களை பார்த்து வருவபவர் வெங்கட்ராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

55
15 நிமிடங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வெங்கட்ராமன்

அண்மையில் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னை வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த நிகழ்வின் போது தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளே அனுமதிக்கப்பட்டாமல் தனியார் பாதுகாவலர்களால் 15 நிமிடங்கள் தடுத்து நிறுத்தப்பட்டார். உரிய அடையாள அட்டை காண்பிக்காததால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

Read more Photos on
click me!

Recommended Stories