TASMAC Shop Timing Change: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டாஸ்மாக் கடைகளின் மூடும் நேரத்தை இரவு 10 மணிக்கு பதில், ஒரு மணி நேரம் முன்னதாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனை அரசு எடுத்து நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனையாகிறது. அதுவும் வார விடுமுறை நாட்களில் 120 கோடியை எட்டும். குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் இதன் வருமானம் இரட்டிப்பாகும். அதுமட்டுமல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.
24
வருமானத்தை கொட்டி கொடுக்கும் டாஸ்மாக்
தமிழக அரசுக்கு வருமானத்தை கொட்டிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது. மேலும் இயந்திரமே டாஸ்மாக் மற்றும் பத்திர பதிவுத்துறையில் வரும் வருமானத்தை வைத்து தான் இயங்குவதாகவே கூறப்படுகிறது. புயல் மழை என வந்தாலும், தீபாவளி, பொங்கல் என விஷேச நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை. தற்போது டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணி வரை இயங்குகின்றன.
34
டாஸ்மாக் கடைகள் நேரம் மாற்றம்
இந்நிலையில் இதில் அதிரடி மாற்றம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் இரவு, பகல் நேரங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பருவமழை முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்கு பதில் ஒரு நேரம் முன்னதாக மூட அரசு பரிசீலித்து வருகிறது.
மழை நேரத்தில் வீடுகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதால் கடை மூடும் நேரத்தை குறைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மழையின் சூழலுக்கு ஏற்ப கடைகளை சீக்கிரமாக மூட சில மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.