ஆதவ், புஸ்ஸி ஆனந்தை நம்பி பயனில்லை! ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை களமிறக்கும் விஜய்! அதிரடி முடிவு!

Published : Oct 31, 2025, 07:43 PM IST

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திட்டமிட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் குழுவை விஜய் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.

PREV
14
30 நாட்களுக்கு பிறகு உயிர்ப்பித்த தவெக

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு சுமார் 30 நாட்கள் தலைமறைவாக இருந்த தவெக மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நேரில் செல்லாமல் மாமல்லபுரம் வரவழைத்து ஆறுதல் தெரிவித்த விஜய், மீண்டும் கட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். தவெகவின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவை அமைத்த விஜய், நிர்வாகக்குழு கூட்டத்தையும் உடனே கூட்டினார்.

24
பழைய பார்முக்கு திரும்பும் விஜய்

மேலும் வரும் 5ம் தேதி தவெக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்து விரக்தியில் இருந்த தொண்டர்களுக்கு தெம்பூட்டியுள்ளார். அத்துடன் பழைய பார்முக்கு திரும்பி, நெல் கொள்முதல் சரிவர செய்யாத திமுக அரசை கடுமையாக விளாசித் தள்ளியுள்ளார். இப்படியாக தவெக மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், விஜய் பழையபடி எப்பொது மக்களை சந்திக்க போகிறார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் குழு

கரூர் சம்பவத்தை போல் இனி நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள விஜய், மக்களை சந்திப்பை திட்டமிட்டு மிகவும் கவனமுடன் நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். இதனால் தவெக பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திட்டமிட ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 15 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

34
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அனுபவமின்மை

விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாததன் விளைவாகத் தான் கரூரில் 41 உயிர்கள் பறிபோனது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரின் சரியான திட்டமிடல் இல்லாததும் கரூர் சம்பவத்துக்கு முக்கிய காரணம். திமுக, அதிமுக என பெரிய கட்சிகளை போல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் அனுபவம் அவர்களுக்கு இல்லாததும் வெட்டவெளிச்சமானது.

அனுபவமிக்க காவல் அதிகாரிகள்

இதனால் தான் விஜய் ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி அடங்கிய அதிகாரிகள் குழுவை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போலீஸ் அதிகாரிகளை பொறுத்தவரை தாங்கள் பணிபுரிந்த காலத்தில் திமுக, அதிமுக என பெரும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருப்பார்கள். எந்தெந்த கட்சிகளின் கூட்டங்களுக்கு எத்தனை பேர் வருவார்கள்? எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும்? உணர்ச்சிமிக்க தொண்டர்களை கட்டுப்படுத்துவது எப்படி? போன்ற அனுபவங்களை பெற்றிருப்பார்கள்.

44
திட்டமிட்டு செயல்படும் விஜய்

திமுக, அதிமுகவில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களே கூட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருப்பார்கள். ஆனால் தவெகவில் அத்தகைய தலைவர்கள் இல்லாததும், தன்னை பார்க்க வரும் இளைஞர்களை கட்டுப்படுத்தும் சிரமத்தை அறிந்தும்தான் அனுபவம்வாய்ந்த காவல்துறை அதிகாரிகளை களமிறக்குறார் விஜய்.

விரைவில் வெளியாகும் அறிவிப்பு

இந்த அதிகாரிகளின் சரியான, தெளிவான திட்டமிடல் மூலம் பொதுக்குழு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் தேவையில்லாத பிரச்சனையை தவிர்க்க முடியும் என விஜய் நினைக்கிறார். இந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் அடங்கிய குழு குறித்த அறிவிப்பை விஜய் விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories