சொன்னதை செய்த எடப்பாடி..! 'நாளை நடக்க போறதை பாருங்க'..! செங்கோட்டையன் அதிரடி பேட்டி!

Published : Oct 31, 2025, 06:29 PM IST

EPS Removes Sengottaiyan from AIADMK: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை காலை விரிவாக பேச உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவர் எடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

PREV
14
அதிமுகவில் பெரும் குழப்பம்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. ஏற்கெனவே ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிற்கும் நிலையில், இப்போது செங்கோட்டையனும் சேர்ந்துள்ளார்.

24
எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன்

கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெகுண்டெழுந்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றியணைய வேண்டும் என்று கூறியதுடன் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார். இதனால் கோபம் அடைந்த இபிஎஸ் செங்கோட்டையனின் பதவியை பறித்தார்.

ஓபிஎஸ், டிடிவியுடன் கைகோர்த்த செங்கோட்டையன்

அதன்பின்பு செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக எந்த கருத்தும் தெரிக்காமல் இருந்ததால் அவர் அமைதியாகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் நேற்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஒபிஎஸ், டிடிவி மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து, 'அதிமுக ஒன்றிணைய வேண்டும். இபிஎஸ்ஸை வீழ்த்தும் வரை ஓய மாட்டோம்' என்று சபதம் எடுத்தனர்.

34
அதிமுகவில் இருந்து நீக்கம்

'கட்சிக்கு எதிராக திரும்பிய செங்கோட்டையனை ஏன் அதிமுகவில் இருந்து நீக்கவில்லை?' என இபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த இபிஎஸ், ''செங்கோட்டையனை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை. கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை இருக்கும்'' என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், இன்று தான் சொன்னபடி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து அதிரடியாக உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இபிஎஸ் விளக்கம்

கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாலும் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

44
என்ன முடிவு எடுக்கப் போகிறார் செங்கோட்டையன்?

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேச உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனால் நாளை செங்கோட்டையன் என்ன பேசப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 ஓபிஎஸ், டிடிவியுடன் இணைந்து இபிஎஸ்ஸை கடுமையாக எதிர்க்கப் போகிறாரா? இல்லை பாஜக ஆதரவுடன் அதிமுகவில் இபிஎஸ்க்கு எதிராக காய் நகர்த்தப்போகிறாரா? இல்லை திமுகவில் இணையப் போகிறாரா? என்பது செங்கோட்டையனின் நாளைய பேட்டிக்கு பிறகே தெரியவரும்.

Read more Photos on
click me!

Recommended Stories