தமிழ்நாடு அரசு, 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'சூழல் அறிவோம்' என்ற மாநில அளவிலான வினாடி வினா போட்டியை நடத்துகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.50,000 வரை பரிசுகள் வழங்கப்படும்.
நிதித்துறை , சுற்றச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் அவர்கள் 2025ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் “தமிழ்நாடு அரசு காலநிலைக் கல்வியறிவினை ஒரு இயக்கமாக முன்னெடுத்து, பள்ளிகளில் சூழல் மன்றங்களை விரிவுபடுத்துதல் , பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்கள் மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகள் போன்றவை நடத்தப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
25
வினாடி வினா போட்டி
அதன் அடிப்படையில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தவும் காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு “ சூழல் அறிவோம்” என்னும் தலைப்பின் கீழ் மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடத்துவதற்கு தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் முன்மொழிந்துள்ளது.
35
நவம்பர் 05ம் தேதி கடைசி நாள்
போட்டியில் பங்குகொள்வதற்கு பதிவு செய்யவும், போட்டிக்கான விதிமுறைகளை தெரிந்துகொள்ளவும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள Link ஐ Click செய்யவும். https://www.tackon.org/soozhal இப்போட்டியில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 05ம் தேதி கடைசி நாளாகும்.
அதேபோல் வினாடி வினா போட்டியின் முதற்கட்ட சுற்று நவம்பர் 06 மற்றும் 07 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணிவரை நடைபெறும். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 10 அணிகள் இரண்டாவது சுற்றில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சுற்றுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
55
பரிசுகள் விவரம்
மாநில அளவில் முதலிடத்தை பெற்ற குழு ரூ.50,000, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற குழு ரூ.30,000, மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற குழு ரூ.20,000, இறுதி சுற்றுக்கு தேர்வாகிய மற்ற போட்டியாளர்கள் ரூ.5,000 வழங்கப்படும். எனவே, அனைத்து வகை நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் உதவியுடன் மாணவர்களை சிறப்பான முறையில் பங்குகொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.