எனக்கு ஒரு ட‌வுட்டு! கடைசியில் தவெக தொண்டர்களை பார்த்து விஜய் கேட்ட 'அந்த' கேள்வி! அதிர்ந்த திருவாரூர்!

Published : Sep 20, 2025, 07:20 PM IST

TVK Vijay Campaign: திருவாரூரில் ஆவேசமாக பேசிய தவெக தலைவர் விஜய், இறுதியில் தவெக தொண்டர்களை பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார். அது என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
15
தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம்

தவெக தலைவர் விஜய் இன்று மதியம் நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மாலையில் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் வழக்கம்போல் திமுக அரசை கடுமையான விமர்சனம் செய்தார். ''ரொம்ப நாளா ஓடாம இருந்த திருவாரூர் தேரை நாங்கதான் ஓட வெச்சோம்னு மார்தட்டி சொன்னது யாருனு உங்களுக்கே தெரியும். 

ஆனால், அவரோட மகன் மாண்புமிகு சி.எம். அவர்கள் இப்ப என்ன செய்றாங்க? நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடுங்குற தேரை நாலு பக்கமும் கட்டையை போட்டு ஆடாம அசையாம அப்படியே நிப்பாட்டிட்டாரு'' என்று விஜய் பேசினார்.

25
திருவாரூரில் அடிப்படை சாலை வசதி இல்லை

தொடர்ந்து பேசிய அவர், ''திருவாரூர் மாவட்டம்தான் அவங்களோட சொந்த மாவட்டம்னு பெருமையா சொல்லிக்குறாங்க. ஆனா, திருவாரூர் இங்க கருவாடா காயுது. அவங்க அப்பா பேருல பேனா வெக்கனும்னு சொல்றீங்க. எல்லா இடத்துக்கும் அவங்க அப்பா பேரை வெக்கனும்னு சொல்றீங்க. சாரி. உங்க அப்பா பேரை வெக்குறீங்க. ஆனால், உங்க அப்பா பொறந்த இந்த திருவாரூர் மாவட்டத்துல ஒரு அடிப்படை சாலை வசதி கூட சரியா இல்லையே சி.எம் சார்'' என்று தெரிவித்தார்.

35
தவெக கொள்கையை விளக்கிய விஜய்

மேலும் ''இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு. அவரோட வேலை என்ன தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சேவை செய்யுறது. மக்கள்தான் முக்கியம்னு அவருக்கு நாம புரிய வெக்கனும்'' என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவையும் விஜய் விமர்சித்தார். 

தொடர்ந்து தவெகவின் கொள்கைகள் குறித்து பேசிய விஜய், ''நம்ம தேர்தல் அறிக்கைல அதுக்கான விளக்கத்தை தெளிவா கொடுப்போம். பொய்யான அறிக்கை கொடுக்க மாட்டோம். எது நடைக்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டும்தான் சொல்லுவோம் அதை மட்டும்தான் செய்வோம்.

45
இது சும்மா கூடும் கூட்டமா?

கல்வி, ரேஷன், பெண்கள் பாதுகாப்பு, அடிப்படை தேவைகளில் நோ காம்ப்ரமைஸ். சிம்பிளா சொல்லனும்னா ஏழ்மை இல்லாத தமிழகம். ஊழல் இல்லாத தமிழகம். குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம். உண்மையான மக்களாட்சி. மனசாட்சி உள்ள மக்களாட்சி. கான்பிடண்ட்டா இருங்க மக்களே. வெற்றி நிச்சயம்'' என்றார். 

தனது பேச்சை முடித்த விஜய், தவெக தொண்டர்களை பார்த்து 'நண்பா. ஒரே ஒரு டவுட். எங்க போனாலும் இது சும்மா கூட்டம், ஓட்டு போட மாட்டாங்கனு சொல்றாங்க. அப்படியா? இது என்ன சும்மா கூட்டமா?' என்று கேள்வி கேட்டார்.

55
விஜய் இந்த கேள்வியை கேட்டது ஏன்?

இதற்கு தவெக தொண்டர்கள் டிவிகே டிவிகே கோஷமிட்டனர். அதன்பின்பு விஜய் 'தேங்க்யூ… தேங்க்யூ.. கோடான கோடி நன்றிகள்' என்று தெரிவித்தார். விஜய் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அலை அலையாக செல்கிறது.

 'இது சினிமா நடிகரான விஜய்யை காண பார்க்க செல்லும் மக்கள் கூட்டம். இது ஓட்டாக மாறாது. ஏன் வடிவேல், நயன்தாராவுக்கு கூட கூட்டம் வரும்' என்று திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. இவர்களுக்கு தான் இப்போது விஜய் தனது கேள்வியின் மூலம் பதிலடி கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories