Published : May 01, 2025, 03:17 PM ISTUpdated : May 01, 2025, 05:34 PM IST
நடிகர் விஜய், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். படப்பிடிப்பிற்காக மதுரை வழியாக கொடைக்கானல் செல்லும் அவர், ரசிகர்கள் தன்னை பின்தொடர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என கட்சியை தொடங்கி மாநாடும் நடத்தி முடித்துள்ளார். இதனையடுத்து சென்னையில் ஓரிரு கூட்டங்களில் கலந்து கொண்டவர், கடந்த வாரம் கோவை சென்றிருந்தார். அப்போது விமான நிலையம் முதல் தவெக கருத்தங்கம் நடைபெறும் மண்டபம் வரை ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
மேலும் விஜய்யின் வாகனத்தின் மீது ஏறியும், இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றும் பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையில் பைக்கை ஓட்டவும் செய்தனர். இதனையடுத்து விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
24
ரசிகர்களுக்கு அட்வைஸ்
அதன் படி நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ் என கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் மதுரை வழியாக கொடைக்கானல் செல்லவுள்ளார் .
இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் இன்று காலை முதல் மதுரை விமான நிலையத்தில் கூடியுள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகத்தோடு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜய் செய்தியாளர்களை சந்தித்தார்.
34
காருக்கு பின் வரவேண்டாம்
அப்போது பேசிய அவர், மதுரை மக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்புக்கு நன்றி. தற்போது ஜனநாயகம் படப்பிடிப்பிற்காக மதுரை செல்கிறேன். அங்கிருந்து கொடைக்கானலில் நடைபெற உள்ள சூட்டிங்கிற்காக செல்கிறேன். கூடிய விரைவில் கட்சி சார்பாக எல்லாரையும் மீட் பண்ணி சந்தித்து பேசுவேன்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் மதுரையில் விமான நிலையத்தில் இறங்கி உங்கள் எல்லாரையும் பார்த்துவிட்டு நான் என் வேலையை பார்ப்பதற்காக போகிறேன். நீங்களும் பத்திரமா அவங்க அவங்க வீட்டிற்கு செல்லுங்கள்.
ரசிகர்கள் யாரும் எனது வாகனதிற்கு பின்னாடியே தொடர வேண்டாம். பைக்கில் வேகமாக வருவதோ, பைக் மேலே நின்று கொண்டு ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுவது இப்படி எல்லாம் செய்ய வேண்டாம். இந்த காட்சிகளை பார்க்கும்போதெல்லாம் மனதுக்கு ரொம்ப பதட்டமாக உள்ளது.
கூடிய கூடிய விரைவில் வேறொரு சந்தர்ப்பத்தில் அனைவரையும் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். மதுரை விமான நிலையத்தில் இதனை சொல்ல முடியுமா என்று தெரியவில்லை அதனால் தான் முன்கூட்டியே சொல்லிவிட்டு செல்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.