தமிழகத்தில் பத்திரப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது பதிவுத்துறை.
தமிழகத்தில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நிதி உதவி திட்டங்கள், கடன் உதவி திட்டங்கள், புதிய கட்டடிங்கள், அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் என தினந்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருந்த போதும் இந்த திட்டங்களை செயல்படுத்த நிதியானது பெரும் சுமையாக உள்ளது. எனவே இந்த திட்டங்களை நிறைவேற்ற கை கொடுப்பது டாஸ்மாக் நிறுவனம். தினந்தோறும் சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.
24
வருவாயை குவிக்கும் பத்திர பதிவு துறை
இதற்கு போட்டியாக வருவாய்துறையும் பத்திர பதிவு மூலம் நிதியை குவித்து வருகிறது. அந்த வகையில் பதிவுத்துறை சார்பில் விஷேச நாட்களில் புதிய, புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பல நூறு கோடி ரூபாயை வணிகவரி பத்திரத்துறை குவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மங்களகரமான நாளான 30-4-2025 புதன்கிழமை அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
34
சலுகைகளை அறிவித்த பதிவுத்துறை
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று 30.4.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் , இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
அந்த வகையில் 2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது. அப்போது இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 2025-26 ம் நிதியாண்டில் இதற்கும் அதிகமாக 30-4-2025 அன்று ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது எனவணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.