ஆனால் விஜய் காலை 8. 45 மணிக்கு தான் சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட விஜய் காலை 9.30 மணி அளவில் திருச்சியை வந்தடைந்தார். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாகவே சினிமாக்காரர்களின் அதாவது பெரிய ஹீரோக்கள் மற்றும் பிரபலமான நடிகர்களின் பழக்கமாகவே உள்ளது. குறிப்பிட்ட இடத்திற்கு முன் கூட்டியே சென்றால் மவுசு இருக்காது என்பதற்காகவே வேண்டும் என்றே காலதாமதமாக செல்லும் நிலையானது பழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் தான் விஜய் இன்றைய நாமக்கல் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் செல்ல உள்ளார். சுமார் 92 கிலோ மீட்டர் காரில் பயணம் செய்யும் விஜய் நாமக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் காரில் இருந்து பிரச்சார வாகனத்திற்கு மாறவுள்ளார்,
வளையபட்டி, வேப்பநத்தம் ஆகிய பகுதிகளில் விஜய்க்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கேஎஸ் தியேட்டர் அருகே காலை 11 மணிக்கு விஜய் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் வருகைக்காக காலை 6 மணி முதலே மக்கள் நாமக்கல்லில் கூடியுள்ளனர்.