காலை 6 மணிக்கே கூடும் மக்கள்..! அதிரும் நாமக்கல்.. என்ன பேச போகிறார் விஜய் தெரியுமா?

Published : Sep 27, 2025, 09:52 AM IST

நடிகர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு செல்கிறார்.  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பேசுவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
13
மக்களை சந்திக்கும் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தேர்தலுக்கு முன்பாக மக்களை சந்திக்கும் வகையில் தொகுதி, தொகுதியாக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் , 

மக்களை சந்திக்கும் வகையில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதன் படி, செப்டம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சி,. அரியலூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை முடித்துள்ள விஜய், அடுத்த கட்டமாக இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை குறிவைத்துள்ளார்.

23
நாமக்கல் , கரூர் செல்லும் விஜய்

அந்த வகையில் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அங்கிருந்து கார் மூலமாக நாமக்கல் பகுதிக்கு செல்லவுள்ளார். நாமக்கல், கே.எஸ்.திரையரங்கம் அருகில் தனது இன்றைய பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார். விஜய்யின் பேச்சை கேட்பதற்காக காலை 6 மணி முதலே மக்கள் கூட தொடங்கியுள்ளனர். பெண்கள், சிறுவர்கள் என ஏராமானோர் குவித்து வருகிறார்கள். 

விஜய்யின் நாமக்கல் கூட்டத்தை முடித்துவிட்டு பிற்பகல் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் மக்களை சந்தித்து உரையாற்றவுள்ளார். திருச்சியில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்தை விஜய் கார் மூலம் பயணம் செய்து நாமக்கல் பகுதியை அடையவுள்ளார். எனவே இன்றைய கூட்டங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

33
செந்தில் பாலாஜி கோட்டையில் விஜய்

அதிலும் கரூர் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து திமுக வந்த செந்தில் பாலாஜி முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கைகுரியவராக உள்ளார். இவரை குறி வைத்து அதிமுக மற்றும் பாஜக செயல்பட்டு வரும் நிலையில், விஜய்யின் கரூர் பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 10 நாட்களுக்குள் முக்கிய அரசியல் கட்சிகள் கரூர் பகுதியை சுற்றி சுற்றி வருகிறது. அந்த வகையில் திமுக சார்பாக முப்பெரும் விழா கரூரில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரமும் நேற்றைய தினம் கரூரில் நடைபெற்றது. எனவே இந்த நிலையில் கரூரில் தவெக தலைவர் விஜய் களம் இறங்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories