தி.மலை அண்ணாமலையார் கோவிலில் அதிர்ச்சி! அபிஷேகம் பார்த்தப்படியே பக்தருக்கு நேர்ந்த சோகம்! நடந்தது என்ன?

Published : Sep 27, 2025, 07:51 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாயரட்சை அபிஷேகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால், தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

PREV
15
அண்ணாமலையார் கோவில்

உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் போற்றக்வடியது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

25
நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

குறிப்பாக வெள்ளி மற்றும் வார முறை நாட்களில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை வழிபட்டு அவரின் அருளை பெறுகின்றனர். இந்நிலையில் அண்ணாமலையால் கோவிலில் பக்தர்கள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

35
சாயரட்சை அபிஷேகம்

நேற்று முன்தினம் மாலை சாயரட்சை அபிஷேகத்திற்கு அர்த்த மண்டபத்தில் 30 பேர் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தெலுங்கானா மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் தனது தாய் மற்றும் மனைவி குழந்தைகளுடன் அபிஷேகத்தில் கலந்து கொண்ட போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

45
கோவிலில் மயங்கி விழுந்த பக்தர்

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் கோவில் ஊழியர்கள் உதவியுடன் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

55
போலீஸ் விசாரணை

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மாநகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories