சீமானையே புலம்பவிட்ட விஜய்! அவரது ஆணவ பேச்சுக்கு என்ன நடவடிக்கை? எங்கே போனார் தன்மான பழனிசாமி? முன்னாள் எம்.பி.!

Published : Sep 27, 2025, 06:50 AM IST

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய்யை விமர்சிக்கும் போது பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரை 'சனியன்கள்' என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி.

PREV
15
சீமான் சர்ச்சை பேச்சு

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்: விஜய் தற்போது பிரசாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டிக் கொண்டு இருக்கிறார். அதிமுகவிடம் இருந்து 2 இட்லி, திமுகவிடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார். அண்ணா, எம்.ஜி.ஆர். என இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமை தோறும் விஜய் சென்று வருகிறார் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டங்களும் எழுந்து வருகிறது.

25
கே.சி.பழனிசாமி

இந்நிலையில் தமிழகத்தில் ஒரு வன்ம அரசியலை முன்னெடுக்கிற சீமானின் இந்த பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: விஜய் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால், தன்னுடைய வாக்கு வங்கியை கபளீகரம் செய்துவிட்டார் என்கிற பரிதவிப்பில் புலம்புகிற சீமான் போகிற போக்கில் பேரறிஞர் அண்ணா அவர்களையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களையும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

35
எம்.ஜி.ஆர்

பேரறிஞர் அண்ணா திராவிட கோட்பாடுகளை உருவாக்கி திமுகவை 1952ல் தேர்தல் அரசியலில் நுழைத்து, இன்றைக்கும் அவரது கொள்கைகள் மூலம் திமுகவும், அதிமுகவும் தமிழகத்தை 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்து அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியிருக்கிறது. அப்படிப்பட்ட அண்ணாவையும், சத்துணவு தந்த சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தமிழக நலன்களுக்கும், மக்களுக்கும் ஆற்றிய பணிகள் மட்டும் அல்ல, சீமான் எந்த பிரபாகரனை மையப்படுத்தி தன்னுடைய அரசியல் வாழ்க்கையை துவங்கினாரோ அந்த தலைவரை உருவாக்கி, பாதுக்காத்து, காப்பாற்றியவரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான்.

45
சீமான் காழ்ப்புணர்ச்சி

உங்க தலைவரின் ஆன்மா கூட சீமானின் இதுபோன்ற கருத்துக்களை ஏற்காது, மன்னிக்காது. அவ்வப்பொழுது படியரிசி அளக்கிறவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதும், அந்தந்த நேரங்களில் காழ்ப்புணர்ச்சியை கக்குவதும் என தமிழகத்தில் ஒரு வன்ம அரசியலை முன்னெடுக்கிற சீமானின் இந்த பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.

55
எடப்பாடி பழனிசாமி

அண்ணா குறித்து தரக்குறைவாக அண்ணாமலை பேசியதற்கு கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்து மத்தியில் ஆளுகிற பாஜக கூட்டணியை விட்டு வெளிவந்த தன்மான பழனிசாமி ஏன் இன்னும் இதுகுறித்து மௌனமாக இருக்கிறார்? ஒருவேளை சீமானின் உதவியால் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிவிடலாம் என்கிற கனவா? எங்கே போனார் அந்த தன்மான பழனிசாமி? விஜய் மீது உள்ள காழ்புணர்ச்சியால் திமுகவும் சீமானை கண்டிக்க தயங்குகிறதா? சீமானின் இந்த ஆணவ பேச்சுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories