சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்: விஜய் மாற்றம் என்பது குறித்து சொல்லவே இல்லை. அவர் திமுகவிலிருந்து இரண்டு இட்லியையும், அதிமுகவில் இருந்து இரண்டு தோசையையும் எடுத்து ஒன்றாக பிச்சு போட்டு ஒரு உப்புமா கிண்டி விட்டார். ஒரு பக்கம் அண்ணாவையும், ஒரு பக்கம் எம்ஜிஆரையும் வைத்து கொண்டார். இதில் என்ன மாற்றம் வருகிறது. இது ஒரு சனியன் அது ஒரு சனியன்.. இரண்டு சனியனையும் சேர்த்து ஒரு சட்டையை தைத்து விட்டார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பி விட்டார் என சீமான் கடுமையாக விமர்சித்தார்.