TVK Vijay Campaign in Namakkal: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். திருச்சி, அரியலூர் மாவட்டங்களைத் தொடர்ந்து, இன்று நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
தமிழகத்தில் இதுவரை திமுக அதிமுக இடையே போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகையால் தமிழகம் அரசியல் விறுவிறுப்பை பெற்றுள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக போட்டியிட போகுவதாக அறிவித்துள்ளார். முதலில் விக்கிரவாண்டி, அடுத்து மதுரை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததை அடுத்து தற்போது 234 தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
24
தவெக விஜய்
அதாவது கடந்த செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் தனது முதல் பிரச்சார பயணத்தை விஜய் தொடங்கினார். இவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு தமிழக அரசியல் கட்சிகள் மிரண்டு போயினர். திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த விஜய் இன்று கரூர் மற்றும் நாமக்கலில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
34
விஜய் நாமக்கல்லில் பிரச்சாரம்
அந்த வகையில் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அங்கிருந்து சாலை மார்கமாக நாமக்கல் பகுதிக்கு செல்லவுள்ளார். நாமக்கல், கே.எஸ்.திரையரங்கம் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இவரை வரவேற்பதற்காக வழி நெடுகிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது நாமக்கல் - சேலம் சாலையில் இரு புறமும் ஏராளமான தவெக கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. விஜய்யின் வலது பக்கம் அறிஞர் அண்ணாவும், இடதுபுறம் எம்ஜிஆர் இருப்பது போன்று பேனர் வைக்கப்பட்டுள்ளது.
விஜய் வருகையையொட்டி காலை முதலே இந்த பகுதிக்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் மற்றும் பெண்கள், சிறுவர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். பிரச்சாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விஜய் இன்று என்ன பேசபோகிறார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஜய்யின் நாமக்கல் கூட்டத்தை முடித்துவிட்டு பிற்பகல் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.