கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் செலுத்துவதற்காக தவெக தலைவர் விஜய் நேரில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தவெக தவிர்த்து அனைத்து கட்சி தலைவர்களும் அம்மாவட்டத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்க நிவாரண உதவி வழங்குதல், ஆறுதல் தெரிவித்த உள்ளிட்ட செயல்களை மேற்கொண்டனர். ஆனால் அசம்பாவிதத்திற்கு மையப்புள்ளியாகக் கருதப்படும் தவெக மட்டும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
24
காவல் நிலையத்தில் அனுமதி கோரும் தவெக
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை வீடியோ காலில் தொடர்பு கொண்டு தனது ஆறுதலைத் தெரிவித்தார். மேலும் நீதிமன்ற அனுமதிப் பெற்று விரைவில் நேரில் வருவதாக உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில் கரூர் செல்லும் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் தேதி குறிப்பிடாமல் அனுமதி கோரப்பட்டுள்ளது.
34
திருமண மண்டபத்தில் நடைபெறும் ஆறுதல் நிகழ்ச்சி
இதனிடையே விஜய் கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை எப்படி சந்திக்க உள்ளார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. மொத்தமாக 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இவர்கள் அனைவரையும் தனித்தனியாக அவர்களது வீடுகளுக்கு சென்று சந்தித்தால் மற்ற பொதுமக்களால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் இவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் வைத்து இவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்க தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிவாரணத் தொகையையும் விஜய் நேரில் வழங்க உள்ளார். இந்த நிகழ்வின் போது கட்சியின் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என யாரையும் அனுமதிக்கத் தேவை இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளை மட்டும் அனுமதிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.