ADMK : பாஜகவை கழட்டி விட தயாராகுதா அதிமுக.? விஜய், திருமாவிற்கு முக்கிய பதவி.? ஆசை காட்டும் எடப்பாடி

Published : Jun 24, 2025, 10:38 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இக்கூட்டணியை விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
15
தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க திமுகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவும், கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற விஜய்யும் போட்டி போட்டு வருகிறார்கள். அந்த வகையில் திமுக கூட்டணியானது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி கூட்டணியாக உள்ளது. 

இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக மட்டுமே உறுதியாக உள்ளது. அடுத்தாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் டப் கொடுக்கும் வகையில் நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகளும் போட்டியில் உள்ளது.

25
அதிமுக பாஜக கூட்டணியை விரும்பாத நிர்வாகிகள்

இந்த சூழ்நிலையில் பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த அதிமுக பல திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் தங்கள் அணியை பலப்படுத்த திமுகவிற்கு எதிரான ஓட்டுக்களை ஒருங்கிணைக்க காய் நகர்த்துகிறது. பாஜகவுடன் கூட்டணியை வேண்டாம் என அறிவித்திருந்த அதிமுக தற்போது கூட்டணியை உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த கூட்டணியை அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் விரும்பவில்லை. பாஜகவுடன் கூட்டணியால் அதிமுகவிற்கு ஓட்டு கிடைக்காதது என தெரிவித்து வந்தனர். 

இதற்கு ஏற்றார் போல் மதுரையில் நடைபெற்ற முருகர் பக்தர்கள் மாநாட்டில் அண்ணா மற்றும் பெரியாரை விமர்சித்து வீடியோ வெளியானது. அதே மேடையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் இருந்துள்ளனர். இந்த வீடியோவிற்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாகவே சென்றுள்ளனர்.

35
அண்ணாவை விமர்சித்த முருகர் பக்தர் மாநாடு

ஆனால் இதனை வைத்து அதிமுகவை அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அண்ணா பெயரை கொண்ட கட்சியை வைத்துக்கொண்டு அண்ணாவை இழிவாக விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 ஏற்கனவே ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுக நிர்வாகி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனவே எஸ்.பி.வேலுமணி நீக்கப்படுவாரா என்ற கேள்வியானது எழுந்துள்ளது.

45
அண்ணா மீதான விமர்சனம்- சங்கடத்தில் அதிமுக

ஏற்கனவே அண்ணாவை அவதூறாக விமர்சித்த காரணத்தால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக இந்த முறையும் கூட்டணியை முறிக்குமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், அண்ணாவை விமர்சிக்காமல் வீடியோ வெளியிட்டு இருக்கலாம். அல்லது முருகர் மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுக்காமலாவது இருந்திருக்கலாம். இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணியாக அதிமுக சிக்கிக்கொண்டு தவிப்பதாகவே கூறப்படுகிறது. 

அதே நேரம் அதிமுக கூட்டணி தொடர்பாக மறு ஆய்வு செய்ய இருப்பதாக ஒருபக்கம் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தங்கள் கூட்டணியில் தவெக மற்றும் விசிகவை இணைக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் திருமாவளவனோ பாஜகவுடன் கூட்டணி இருப்பதால் அதிமுகவுடன் இணைய மறுப்பு தெரிவித்து வருகிறார்.

55
விஜய், திருமாவிற்கு தூது விடும் அதிமுக

இதே கருத்தை விஜய்யும் கூறி வருகிறார். எனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜக கூட்டணியை கழிட்டி விட்டது போல இந்த முறையும் பாஜகவை கழட்டி விடுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி பாஜகவை கழட்டி விடும் பட்சத்தில் அதிமுக மீதான கூட்டணி நம்பிக்கை இழக்க நேரும். மேலும் அதிமுக கூட்டணிக்கு தவெக மற்றும் விசிக வந்தால் துணை முதலமைச்சர் பதவியை வழங்க தயார் என அதிமுக பச்சைக்கொடி காட்டுவதாகவும் கூறப்படுகிறது. எனவே அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா என்று கூறுவது போல தேர்தல் நெருக்கத்தில் தான் கூட்டணி தொடர்பாக இறுதி கட்ட நிலவரம் தெரியவரும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories