ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஒற்றைக்கண் ஜெயபால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் செம்பியம் போலீசார் அவரை கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பட்டினப்பாக்கம் லூப் சாலையில் தனது நண்பர்களுடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கும்பல் ஆற்காடு சுரேஷை சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
25
ஆம்ஸ்ட்ராங்
இந்த கொலை சம்பவத்தை ஒற்றைக் கண் ஜெயபால் மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் இருந்து ரசித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகள் ஜெயபாலை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட்டனர். இந்த விஷயத்தை அறிந்த போலீஸ் ஜெயபாலையும், அவரின் கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆற்காடு சுரேஷை கொலை செய்தவர்களுக்கு ஆம்ஸ்ட்ராங்தான் உதவிக்கரம் நீட்டினார் என ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகள் கருதினர். இதனால், ஆம்ஸ்ட்ராங் மீது அவர்கள் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
35
ஆம்ஸ்ட்ராங் கொலை
இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்ய்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக, அவரது வலது கரமான ஜெயபால் மற்றும் அவரின் கூட்டாளிகள் சிறையில் சதி திட்டம் தீட்டி வந்தனர். சிறைக்குள்ளும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் ஒற்றை கண் ஜெயபால் ஜாமினில் வெளியே வந்தார். வரும் ஜூலை 5ம் தேதி ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகிறது. அதற்குள், ஆற்காடு சுரேஷ் தரப்பில் இருந்து ஒருவரையாவது போட்டு தள்ள வேண்டும் என ஜெயபால் தரப்பு களமிறங்கியது.
55
ஒற்றைக் கண் ஜெயபால் கைது
இதனிடையே சென்னை புளியந்தோப்பு வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சக ரவுடிகளின் தொடர்பில் இருந்து கொண்டு வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதாகவும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை அடுத்து காவல் ஆணையர் அருணின் தனிப்படை போலீசார் ஒற்றைக் கண் ஜெயபாலை செம்பியம் போலீசார் கைது செய்துள்ளனர். ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.