திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கூடாது என வலியுறுத்தி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பவும், பகுதிக்கு பாதுகாப்பு அளிக்கவும் டாஸ்மாக் கடை அவசியம் என அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு காலத்தில் மதுக்கடைக்கு செல்பவர்கள் இரவில் தலையில் முக்காடு போர்த்திக்கொண்டு யாருக்கும் தெரியாமல் கடைக்கு சென்று வந்தனர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மது பாட்டில்களுடன் செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடும் நிலை தான் உள்ளது. அதுமட்டுமின்றி ஆண்கள் நிகராக பெண்களும் மதுக்குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். திருமண நிகழ்ச்சி, பிறந்த நாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் எது இருக்கோ இல்லையோ மது இல்லாமல் இருப்பதில்லை. அதேநேரத்தில் துக்க நிகழ்ச்சி என்றாலும் இதே நிலை தான் நிலவுகிறது.
25
டாஸ்மாக் மதுபான கடைகள்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்டாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் மதுபான கடைகளை அரசு எடுத்து நடத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை அளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது. இதில், வரும் வருமானத்தில் அரசு இயந்திரமே இயங்குவதாக கூறப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 கோடிக்கும், வார இறுதி நாட்களின் ரூ.200 கோடி அளவுக்கும் விற்பனை நடைபெறுகிறது. அதுவும் பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் வருமானம் ஈரட்டிப்பாகும்.
35
தமிழக அரசு
ஆனால், வருமானத்தை கொட்டிக் கொடுத்தாலும் பல்வேறு குடும்பங்களை சீரழிய டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் நாளுக்கு நாள் தமிழகத்தில் கைப்பெண்கள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மதுவால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். ஆகையால் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என ராமதாஸ், அன்புமணி பொதுமக்கள் உள்ளிட்டோர் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். புதிய டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என பெண்கள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது என வலியுறுத்தி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
55
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் 1909 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் மூளைச்சலவை செய்து வருவதாகவும் பணம் பறிக்கும் நோக்கில் அவர்கள் இவ்வாறு செயல்படும் நிலையில் அப்பகுதி பொதுமக்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் தங்கள் கணவர்கள் பாதுகாப்பாக வீடு வந்து சேருவதாகவும், 35 ஆண்டுகளாக செயல்படும் இந்த டாஸ்மாக் கடை அந்த பகுதிக்கு பாதுகாப்பை வழங்குவதாகவும் தங்கள் பகுதியில் இதுவரை எந்தவிதமான திருட்டு கூட நடைபெறாத அளவுக்கு அந்த கடையில் பணியாற்றும் இளைஞர்கள் பாதுகாத்து வரும் நிலையில் தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என கோரி அப்பகுதி பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.