TVK Vijay : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், நாகை பிரச்சாரத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். பிரச்சாரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்த அவர், தனது சனிக்கிழமை பிரச்சார திட்டத்திற்கான காரணத்தையும் விளக்கினார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி மக்களை சந்திக்க களத்தில் இறங்கியுள்ளார். அந்த வகையில் "உங்கள் விஜய், நான் வரேன்" என்ற தலைப்பில் கடந்த 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டமாக மக்கள் மற்றும் தவெக தொண்டர்களை சந்திக்க திட்டமிடப்பட்டது. அந்த வகையில் கடந்த 13ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டார்.
ஆனால் கூட்டம் அதிகளவு கூடியதால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பெரம்பலூர் கூட்டத்தை ரத்து செய்தார். இதனையடுத்து இன்று நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து கார் மூலம் நாகை வந்து சேர்ந்தார்.
24
நாகையில் விஜய் பிரச்சாரம்
நாகையில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் பேசிய விஜய், மீனவர்களுக்காகவும், இலங்கை தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்தமுறை நேரம் அதிகமாகிவிட்டதால் பெரம்பலூர் பகுதிக்கு செல்ல முடியவில்லையெனவும், எனவே அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார். விரைவில் உங்களை சந்திக்க வருவேன் என கூறினார்.
மேலும் நாகை பகுதியில் அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்யவில்லையென குற்றம்சாட்டிய விஜய், முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த அவர், வெளிநாட்டில் முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடு ஈர்ப்பா என கேள்வி எழுப்பினார்.
34
வீக் எண்டு பிரச்சாரம் ஏன்.?
மக்களை சந்திக்க டூர் பிளான் போடும் போது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பிரச்சாரம் செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டதாகவும், அதென்னப்போ சனிக்கிழமை பிளான் என கேட்கப்பட்டதாக கூறினார். இதற்கு காரணம் மக்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது. ஓய்வு நாளில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலே இந்த வீக் எண்டு பிளான்.
வேலைக்கு செல்பவர்களுக்கு எந்த வித தொந்தரவும் இருக்க கூடாது. அப்படி என்கிற ஒரு காரணம் தான். லீவு நாட்கள், ஓய்வு நாட்களில் வர வேண்டும் என்பது தான் தனது எண்ணம் என கூறினார். மேலும் சிலருக்கு அரசியலில் ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா.? இதன் காரணமாகத்தான் ஓய்வு நாள் பிரச்சாரம் திட்டம் போடப்பட்டது என கூறினார்.
அதுவும் நமது பிரச்சாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள். நிற்க கூடாது. உட்கார கூடாது. பேச கூடாது. கொஞ்சம் நேரம் தான் பேச வேண்டும் என எவ்வளவு கட்டுப்பாடுகள். இதற்கெல்லாம் சொத்தையான காரணங்கள் கூறப்படுவதாக விமர்சித்தார்.
மேலும் திருச்சியில் ஸ்பீக்கர் வயர் கட், அந்த பகுதியில் பவர் கட் செய்கிறார்கள். மோடி, உள்துறை அமைச்சர் வந்தால் இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா.? வயர் கட் செய்வீர்களா.? கட் செய்து பாருங்கள்- பேஸ்மெண்ட் அதிரும் என திமுகவை விஜய் கடுமையாக விமர்சனம் செய்தார்.