நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார். நாகப்பட்டினத்தில் விஜய் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணிப்பாசறை ஒருங்கிணைப்பாளர்களும், ஸ்டார் பேச்சாளருமான இருந்து வந்தவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள். இந்நிலையில் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார். இதையடுத்து, காளியம்மாள் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதை காளியம்மாள் திட்டவட்டமாக மறுத்தார்.
24
காளியம்மாள்
மீனவ சமுதாயத்தை சேர்ந்த காளியம்மாள் டெல்டா மாவட்டங்களில் நன்கு அறிமுகமானவர். இதனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் வெளியேறியதை அடுத்து அவரை தங்கள் பக்கம் இழுப்பதற்கு ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலம் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை காளியம்மாள் நேரில் சந்தித்ததாகவும் அவ்வப்போது தகவல் வெளியானது.
34
காளியம்மாள் மறுப்பு
இவ்வாறு ஒரே நேரத்தில் வெவ்வேறு கட்சிகளிடம் காளியம்மாள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனாள் காளியம்மாள் நான் ஒரு கட்சியில் இணைவதாக இருந்தால் அதை முறைப்படி அறிவிப்பேன். அப்படி இணையும்போது எதற்காக அந்த கட்சியில் இணைய போகிறேன் என்பது குறித்து முழு விவரதையும் தெரிவித்து தான் இணைவேன் என தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் நாகப்பட்டினத்தில் பரப்புரை மேற்கொள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் விஜய் முன்னணியில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காளியம்மாள் தவெகவில் இணையும் பட்சத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் சீமானை கதறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.