திமுகவால் அங்கீகாரத்தை இழந்த கூட்டணி கட்சி.! ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்

Published : Sep 20, 2025, 12:16 PM IST

தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்து வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி உட்பட தமிழகத்தின் 42 கட்சிகள் தங்கள் அங்கீகாரத்தை இழந்துள்ளன.

PREV
14

நாடு முழுவதும் பல ஆயிரம் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளது. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பெரிய கட்சிகளின் சின்னங்களிலும் போட்டியிட்டும் வருகின்றது. மேலும் ஒரு சில கட்சிகள் லெட்டர் பேட் கட்சியாக மட்டுமே இருந்து தேர்தலின் போது அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து பணத்தை வாங்குவதில் மட்டுமே குறியாக இருக்கும். அப்படிப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய முடிவு எடுத்தது. அந்த வகையில், தேர்தலில் தொடர்ந்து 6 வருடங்கள் போட்டியிடாத கட்சிகளின் பதிவை ரத்து செய்ய முடிவு செய்து நடவடிக்கையும் மேற்கொண்டது.

24

தற்போது 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அவை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

 இதன் படி கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி மேலும் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

34

அந்த வகையில் 2019 முதல் எந்தவித தேர்தலிலும் போட்டியிட வேட்பாளர்களை நியமிக்காத, மனிதநேய மக்கள் கட்சியின் பதிவு உரிமம் ஏன் ரத்து செய்யக்கூடாது என, கேள்வி எழுப்பி, விளக்கம் அளிக்கக் கோரி, தமிழக தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. 

இருந்த போதும் கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மனித நேய மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மனித நேய மக்கள் கட்சி நீடித்து வருகிறது.

44

எனவே ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் தனி சின்னத்தில் போட்டியிட விடாமல் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக வேறு வழியின்றி சிறிய கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்படுகிறது.

 இதனால் தங்களது கட்சி சார்பாக தனி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடாத காரணத்தால் தேர்தல் ஆணையத்தின் கணக்கின் படி மனித நேய மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிடாத நிலையை காட்டுகிறது. இதனையடுத்து தான் மனித நேய மக்கள் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories