மெட்ரோ ரயிலில் பொருட்களை மிஸ் பண்ணிட்டீங்களா.. இனி கவலை வேண்டாம்- சூப்பர் அறிவிப்பை சொன்ன சென்னை மெட்ரோ

Published : Sep 20, 2025, 11:26 AM IST

Chennai Metro : சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகத்தை" (Lost & Found Office) தொடங்கியுள்ளது. 

PREV
14
சென்னை மெட்ரோ ரயில் - புதிய திட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை பெரும் உதவியாக இருந்து வருகிறது. அந்த வகையில் தினந்தோறும் மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகரித்து ஒவ்வொரு மாதமும் புதிய பயணிகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக விமான நிலையம், கோயம்பேடு என பல இடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 

மேலும் பல இடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பொருட்களை தவறவிடும் நிலையில் அதனை மீட்டு மீண்டும் ஒப்படைக்க புதிய திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

24
மெட்ரோ ரயிலில் தொலைந்த பொருட்களை மீட்க வசதி

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பயணிகள் அனைவரும் தங்களின் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. அப்படி ஏதேனும் பொருட்களை தவறவிட்டால், 

அதற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொறுப்பேற்காது எனினும், பயணத்தின் போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால் அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலமாகவோ பெற முடியும்.

34
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய அலுவலகம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், அமைப்புகள் மற்றும் இயக்கம்). புரட்சித்தலைவர் டாக்டர். எம் ஜி.இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகத்தை" (Lost & Found Office) திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் திரு. கோபிநாத் மல்லையா, இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொது மேலாளர் திரு எஸ் சதீஷ்பிரபு, இயக்கம் மற்றும் பராமரிப்பு). சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

44
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

இதுவரை தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக பயணிகளுக்கு இழந்த பொருட்கள் மீட்டு தரப்பட்டது இதுவரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலம், 74% இழந்த பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன இப்போது இந்த அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் நேரடியாக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் உள்ள இந்த அலுவலகத்தை அணுகி தங்களின் இழந்த பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.

 இந்த முயற்சி பயணிகள் வசதியை பெரிதும் மேம்படுத்தி சிறந்த அணுகல் வசதி மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இழந்த பொருட்கள் தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள

மின்னஞ்சல் : LFO@cmrl.in

இணையதளம் : https://chennaimetrorail.org/lost-and-found-enquiry

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க உறுதி மேற்கொண்டுள்ளது

Read more Photos on
click me!

Recommended Stories