சென்னையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலன் அறையில் மது அருந்திய இளம்பெண், குளியலறையில் வழுக்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். இதேபோல், விடுதியில் மது அருந்திய கல்லூரி மாணவி ஒருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 26 வயது இளம்பெண். நந்தனத்தில் உள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மதுரவாயல் அடுத்த ஆலபாக்கம் பகுதியில் வசித்து வரும் கணேஷ்ராம் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
24
மது அருந்தி விட்டு சிக்கன் சாப்பிட்டனர்
சேலத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சினிமா டைரக்டராக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்ததும் கணேஷ்ராம் தங்கியிருந்த ரூமுக்கு காதலி வந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். பிறகு இருவரும் சேர்ந்து சிக்கன் சமைத்து சாப்பிட்டனர். சிறிது நேரத்திலேயே அப்பெண்ணுக்கு வாந்தி வந்துள்ளது.
34
போலீஸ் விசாரணை
இதனால் பாத்ரூமுக்கு சென்றபோது அங்கே தடுமாறி அலறிய படியே கீழே விழுந்துவிட்டார். இதில் நெற்றியில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை சற்று எதிர்பாராத காதலன் கணேஷ்ராம் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக ஏகாட்டூரில் விடுதியில் தங்கியிருந்தார். வார விடுமுறையை கொண்டாட தோழிகளின் அறைக்கு சென்று மது அருந்தியுள்ளார். அப்போது வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.