Published : Sep 20, 2025, 02:29 PM ISTUpdated : Sep 20, 2025, 02:40 PM IST
TVK Vijay: நாகப்பட்டினத்தில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளும் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2026 தேர்தல் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையேதான் போட்டி.
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு அதிரடி வியூகங்களுடன் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்கிறார். தனது முதற்கட்ட அரசியல் பரப்புரையை திருச்சியில் இருந்து தொடங்கிய அவருக்கு வரவேற்பை கண்டு தமிழக அரசியல் கட்சிகள் மிரண்டு போயியுள்ளனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினத்தில் பரபரப்புரை மேற்கொண்டார்.
26
தவெக தலைவர் விஜய் பரப்புரை
அப்போது ஆளும் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது அண்ணாவுக்கு வணக்கம். பெரியாருக்கு வணக்கம். நாகூர் ஆண்டவர் அன்போடு, நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு, கடல்தாய் மடியில் இருக்கிற என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணிலிருந்து பேசிக் கொண்டு இருக்கிறேன். என்றும் மீனவ நண்பனாக இருக்கிற விஜய்யின் அன்பு வணக்கம். எந்த பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கிற ஊர் நாகப்பட்டினம். மதவேறுபாடு இல்லாத, அனைவருக்கும் பிடித்துப்போன, மதசார்புகளற்று வாழும் மக்கள் நாகை மக்கள் என்றார்.
36
விஜய்
உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் சந்திக்க வரவேண்டும் என்பதற்காக தான் சனிக்கிழமையில் வருகிறேன். அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஓய்வு நாளில் உங்களை சந்திக்க வருகிறேன். அதை பேசாதீர்கள் இதை பேசாதீர்கள் என்றால் நான் எதைத்தான் பேசுவது என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி, அரியலூரில் கடந்த வாரம் சென்று வந்தேன்.
ஆனால் பெரம்பலூர் பகுதி செல்ல முடியவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். பேருந்துக்குள் இருக்க வேண்டும் வெளியில் வரக்கூடாது கையை அசைக்காதே, மக்களை பார்த்து சிரிக்காத என காமெடியாக நிபந்தனைகள் விதிக்கின்றனர். தேர்தலுக்கு முன்பு திமுக காரர்கள் வந்து செய்வோம் செய்வோம் என்று சொன்னார்கள் செய்தார்களா? எதையும் செய்யாமலே செய்வோம் செய்வோம் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள். குடும்பத்தை வைத்துக் கொள்ளையடிக்கும் உங்களுக்கு இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதிக்கும் எனக்கு எவ்வளவு இருக்கும்.
56
முதல்வர் ஸ்டாலின்
2026ல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டி. ஒன்று திமுகவுக்கும் மற்றொன்று தவெகவிற்கும் தான் போட்டி என்றார். என் சொந்த மக்களை சந்திக்க எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள். நான் தனியாள் இல்லை நான் பேசுவதை மூன்று நிமிடம் தான் அதில் பேசக்கூடாது இதை பேசக்கூடாது என்கிறார்கள். நான் உங்களை சந்திப்பதற்கு கூட தடை போடும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறைகளை நிறைந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது தவெக ஆட்சி அமைய வேண்டுமா? நான் பிரச்சாரம் செய்ய சென்ற அரியலூரில் மின்வெட்டு திருச்சியில் மைக் ஒயர் கட் இப்படியா செய்வீர்கள் சிஎம் சார் என கூறினார்.
66
வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம்
ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வரும்போதெல்லாம், இத்தனை கோடி முதலீடு என்று முதலமைச்சர் சிரித்துகொண்டே சொல்வாரே! சி.எம். சார் மனதை தொட்டு சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதலீடா? இல்லை உங்கள் குடும்பத்தின் முதலீடா? இல்லை உங்கள் குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்கு போகிறதா? என கேள்வி எழுப்பினார்.