இனி தவெகவினர் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது.! புஸ்ஸி ஆனந்த் அதிரடி.. என்ன காரணம்?

Published : Feb 26, 2026, 01:37 PM IST

TVK Vijay: ​பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் முன்அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும். 

PREV
14
தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் விஜய் வருகையால் இம்முறை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சிகள் களத்தில் உள்ளனர். அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

24
தவெகவை நெருங்கும் காங்கிரஸ்

புதியதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் கட்சியான தவெகவுடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் பட்சத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், நிர்வாகிகளால் ஏற்படும் பல்வேறு சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக ஊடக விவாதங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

34
தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்

இதுதொடர்பா தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் எக்ஸ் தள பக்கத்தில்: தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.

44
ஊடக விவாதங்களில் பங்கேற்க தடை

​பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories