அதில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை பெய்யும். பின்னர் மழை மேகங்கள் கேரளாவை நோக்கி நகர்ந்து அங்கு மழை பெய்யும் என கூறியிருந்தார்.