Leema Rose: லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் கடந்த 17ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தேர்தல் என்றாலே அரசியல் பிரமுகர் கட்சி மாறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணைப்பொதுச்செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி திடீரென ஐஜேகேவில் இருந்து விலகுவதாக பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், 14 ஆண்டுகளாக நேரம் காலம் பார்க்காமல் நான் உழைத்தேன். கட்சி, என் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்பதும் சமீப காலமாக எனது உழைப்பை உதாசீனப்படுத்தியதும் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
25
ஐஜேகேவில் இருந்து விலகல்
இதுபோன்ற சூழலில் இக்கட்சி ஒரு பெண்ணுக்கு அங்கீகாரம் வழங்காதது பெரும் ஏமாற்றமே. கட்சித் தலைமையில் இருந்து எந்த ஒரு முறையான பதிலும் வராத காரணத்தினாலும், சில சமீபகால கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்க நான் தள்ளப்பட்டுள்ளேன் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கடந்த 17ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
35
லீமா ரோஸ்க்கு அதிமுகவில் முக்கிய பதவி
இந்நிலையில் அதிமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் லீமா ரோஸுக்கு அக்கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் லீமா ரோஸ் மார்ட்டின் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
லீமா ரோசுக்கு மாநில அளவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் லீமா ரோஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
55
ஆதவ் அர்ஜுனா மாமியார்
லீமா ரோஸின் மகன் ஜோ சார்லஸ் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கி புதுச்சேரி அரசியலில் அதிரடி காட்டி வருகிறார். அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா தவெகவில் மேலாண்மை பொதுச்செயலாளர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.