2 நாள் விடுமுறை.. மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி.. போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்!

Published : Feb 25, 2026, 07:57 PM IST

தமிழகத்தில் 2 நாள் வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
2 நாள் வார விடுமுறை

பிப்ரவரி 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) 28ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் மார்ச் 1ம் தேதி (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

24
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்

அதாவது சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 310 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 325 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

34
பெங்களூரு, கோவை

மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது தவிர‌ ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

44
முன்பதிவு செய்வது எப்படி?

இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,850 பயணிகளும் சனிக்கிழமை 2,607 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 5,944 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். 

இந்த பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை இனிமையாக மேற்கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories