ஒரே நேரத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியை அலறவிடும் தவெக! அதிர்ச்சியில் அதிமுக, திமுக!

Published : Jul 15, 2025, 01:58 PM IST

தமிழக வெற்றி கழகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த தகவல்களை கோரியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தர மறுப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

PREV
14
தமிழக வெற்றி கழகம்

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்குகள் விரைந்து விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

24
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக வெற்றி கழகத்தின் சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆதித்ய சோழன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தமிழகத்தின் முன்னாள், இந்நாள் எம்.பி- எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்கக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்தேன்.

34
மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு

மேலும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என கோரியிருந்தேன். எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தேன். ஆனாலும், நான் கேட்ட தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை .

44
அதிமுக, திமுகவினர் அதிர்ச்சி

பொது மக்கள் நலன் கருதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை தர மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல். எனவே எனது கோரிக்கை தொடர்பான விவரங்களை வழங்க மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக, திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories