TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான குஷியான அறிவிப்பு.! என்ன தெரியுமா.?

Published : Jul 15, 2025, 11:53 AM ISTUpdated : Jul 15, 2025, 11:57 AM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28 அன்று நடைபெறும். மொத்தம் 645 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 13.

PREV
15
அரசுப்பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள்

தமிழ்நாடு அரசு பணியில் சேர்வது பல லட்சம் இளைஞர்களின் கனவாகவே உள்ளது. இதற்காக இரவு பகல் பாராமல் தேர்விற்கு தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் குரூப் 4 தேர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முடிவடைந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணியிடங்களுக்கு பணியாளர்கள் நிரப்பப்படவுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு செப்டம்பர் 28 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 645 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதில் குரூப் 2க்கு 50, குரூப் 2ஏக்கு 595 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II தொகுதி II மற்றும் IIA பணிகள்இல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டும் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25
தேர்வர்களுக்கு முக்கியமான அறிவுரைகள்:

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. உடற்தகுதிச் சோதனை, நடைச் சோதனை, கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவது அல்லது தெரிவு செய்யப்பட்டோர் பட்டியலில் தற்காலிகமாக தேர்வரின் பெயர் சேர்க்கப்படுவதால் மட்டுமே. ஒரு தேர்வர் பதவி நியமனம் பெற உரிமை அளிக்கப்பட்டவராக கருதப்பட மாட்டார். தேர்வரால் அளிக்கப்பட்ட விவரங்கள் தவறு என்றாலோ தேர்வாணைய அறிவுரைகள் அல்லது விதிகள் மீறப்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டாலோ, எந்நிலையிலும், தெரிவு செய்யப்பட்ட பின்னர்கூட விண்ணப்ப நிலையை உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கும் உரிமை தேர்வாணையத்திற்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
விண்ணப்பிக்க மற்றும் தேர்வு நாட்கள் மற்றும் நேரம்
  • அறிவிக்கை வெளியிட்ட நாள்- 15.07.2025
  • இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்- 13.08.2025
  • விண்ணப்பத் திருத்தச் சாளர காலம்- 18.08.2025 முதல் 20.08.2025 வரை

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் 28.09.2025 நேரம்- 09.30 முதல் 1230 வரை

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்- முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது வெளியிடப்படும்.

ஒருமுறைப் பதிவு மற்றும் இணைய வழி விண்ணப்பம்:

தேர்வர்கள் www.tnpscexams.in எனும் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் (OTR) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருப்பின். அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம்.

விண்ணப்பத் திருத்தச் சாளரம்

இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளுக்குப் பின்னர் விண்ணப்பத் திருத்தச் சாளரம் 18.082025 முதல் 20.08.2025 வரை மூன்று நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். இக்காலத்தில் தேர்வர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய இயலும், விண்ணப்பத் திருத்தச் சாளரக் காலம் முடிந்த பின்னர் இணையவழி விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.

45
தேர்வின் போது தடைசெய்யப்பட்ட பொருட்கள்

அலைபேசி (Mobile Phone), அகவி (Pager) அல்லது ஏதேனும் மின்னணு கருவி அல்லது நிரலாக்கம் செய்யப்பட்ட சாதனங்கள் (Programmable Devices) அல்லது விரலி (Pendrive), திறன் கைக்கடிகாரம் (Smart Watches) போன்ற சேமிப்பு மின் ஊடகம் (Storage Media), குறிப்பு நினைவகங்களை (Memory Notes) உள்ளடக்கிய கைக்கடிகாரம் மற்றும் குறிப்பு நினைவகங்களை (Memory Notes) உள்ளடக்கிய மோதிரம், இன்னும் பிற அல்லது புகைப்படக்கருவி அல்லது ஊடலை கருவிகள் (Bluetooth Devices) அல்லது

 தகவல் தொடர்பு சில்லுகள் (Communication Chips) அல்லது வேறு ஏதேனும் சாதனங்கள் அல்லது தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்தத்தக்க துணைக் கருவிகள் செயல்பாட்டிலோ அல்லது அணைக்கப்பட்ட நிலையிலோ தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் கொண்டுவர அனுமதியில்லை. P&G தரவுப் புத்தகம், கணிதம் மற்றும் வரையும் கருவிகள், மடக்கை அட்டவணைகள், படியெடுக்கப்பட்ட வரைபடங்கள், புத்தகங்கள், நகரி (Slide Rules), குறிப்புகள் கையேடுகள் தாள்கள் (Loose Sheets and Rough Sheets), கைப்பைகள் போன்ற மின்னணு கருவிகள் அல்லாதவற்றையும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்றிகுள் கொண்டுவர அனுமதியில்லை.

55
தடை செய்யப்பட்ட பொருள்- தேர்வர்கள் வெளியேற்றம்

அவ்வாறான தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லதுகருவிகள் வைத்திருப்போர்கள் கண்டறியப்பட்டால். தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படுவதுடன் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும், தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவர் தேவை எனக்கருதப்படின் அவ்விடத்திலேயே சோதனைக்கு (உடற்சோதனை உட்பட )உட்படுத்தப்படுவர். 

தேர்வர்கள் அவர்களின் சொந்த நலன் கருதி கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களைத் தேர்வு கூடத்திற்கு எடுத்துவரவேண்டாம் என அறிவுறுத்தப்படுவதுடன் அப்பொருட்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர இயலாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories