இன்றைய TOP 10 செய்திகள்: ஸ்டாலின் அறிவிப்பு முதல் செங்கோட்டையன் மூவ் வரை

Published : Sep 25, 2025, 11:06 PM IST

முதல்வர் ஸ்டாலின் கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்துள்ளார். இதற்கிடையில், லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மீது சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது, மேலும் தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

PREV
19
தெறிக்க விட்ட ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்வியில் வளர்ந்த தமிழ்நாடாக மாறும் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ''இங்கு மாணவர்களின் பேச்சை கேட்க கேட்க நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.

29
சோனம் வாங்சுக்கை டார்கெட் செய்யும் சிபிஐ!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்திப் போராடி வரும் கல்வியாளரும் சமூக ஆர்வலருமான சோனம் வாங்க்சுக் (Sonam Wangchuk) தொடங்கிய நிறுவனம் வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ (CBI) விசாரணை தொடங்கியுள்ளது.

சோனம் வாங்க்சுக் நிறுவிய இமயமலை மாற்று வழிகள் நிறுவனம் - லடாக் (HIAL) அமைப்பின் நிதி ஆதாரங்கள் குறித்து சிபிஐ, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னரே விசாரணையைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வாங்க்சுக் பாகிஸ்தானுக்குச் சென்றது குறித்தும் சிபிஐ ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

39
தபால் வாக்குகள் எண்ணிக்கையில் மாற்றம்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு தொடர்பாக அண்மையில் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், தற்போது அஞ்சல் வாக்குகள் (Postal Ballots) எண்ணப்படும் நடைமுறையில் தேர்தல் ஆணையம் (Election Commission of India - ECI) ஒரு புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாகப் பெயர்கள் நீக்கப்படுவது தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியபோதும், தேர்தல் ஆணையம் அதனை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

49
செங்கோட்டையனின் அடுத்த மூவ்!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததால் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டதால், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

59
600 அடி உயர ராமர் சிலை

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயிலான ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோயில் குளத்தின் நடுவே 600 அடி உயர ராமர் சிலை அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) திட்டமிட்டுள்ளது.

ஒண்டிமிட்டா நகரத்தை, தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிக மற்றும் சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்தின் பகுதியாக இந்தச் சிலை அமைக்கப்பட உள்ளது.

69
பில்லை பிரித்தால் ஜிஎஸ்டி குறையுமா?

தீபாவளி ஷாப்பிங்கில் ஆடைகளுக்கான ஜிஎஸ்டி மொத்த பில் தொகையில் விதிக்கப்படுவதாகப் பரவும் தகவல் தவறானது. ஒவ்வொரு ஆடையின் விலைக்கும் (₹2,500 வரை 5%, அதற்கு மேல் 18%) தனித்தனியாகவே ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது, எனவே பில்லைப் பிரிப்பதால் வரி குறையாது.

79
விரைவில் மோடி - டிரம்ப் சந்திப்பு

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த விவகாரத்தில், இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்ததால் ஏற்பட்ட வர்த்தகப் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

89
விவசாயிகளுக்கு கொண்டாட்டம்

வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதுடன், பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் இடம்பெறும்.

99
ஜி.கே.மணியையும் தூக்கும் அன்புமணி

பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. தற்போது ராமதாஸின் முக்கிய ஆதரவாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான ஜிகே மணியை அப்பொறுப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories