மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் சிவகுமார், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், மிஸ்கின், பிரேம் குமார், ஞானவேல், கிரிக்கெட் வீரர் நடராஜன், தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்விக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பயன் பெறும் பயனாளிகள் மேடையேறி பேசினார்கள்.
வாழைப்பழம் திருடினேன்
இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், காலை உணவுத் திட்டத்தின் பெருமை குறித்து பேசினார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு இந்த தலைப்பை கேட்கும்போதே அவ்வளவு பெருமையாக உள்ளது. நான் முதன் முதலில் பசியால் தான் திருட்டுப் பழக்கத்தை கற்றுக் கொண்டேன். நான் முதலில் வாழைப்பழத்தை தான் முதலில் திருடினேன்.