கூட்டணியில் இருந்து நாங்கள் விலகிட்டா அனைத்து தொகுதியிலும் திமுக தோல்வி.! ஸ்டாலினுக்கு சவால் விடும் காங். மாவட்ட தலைவர்

Published : Sep 25, 2025, 04:52 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் துணை இல்லாமல் திமுக தேர்தலில் வெல்ல முடியாது என்றும், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் என்றும் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ் எச்சரித்துள்ளார். 

PREV
15

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், நாளுக்கு நாள் புதிய புதிய நகர்வுகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஓபிஎஸ், டிடிவி திடீரென பல்டி அடித்துள்ளனர். 

பாமக மற்றும் தேமுதிக தங்களது முடிவுகளை அறிவிக்காமல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் பலம் வாய்ந்த கூட்டணியாக பார்க்கப்பட்ட திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

25

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகியை திமுகவில் செந்தில் பாலாஜி இணைத்தது ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. அடுத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் - திமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் துணையில்லாமல் திமுக தேர்தலில் வெல்ல முடியாது. 

அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் என காங்கிரஸ் மாவட்ட தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

35

திமுகவினர் காங்கிரஸ் கட்சியை மதித்து நடக்க வேண்டும். அதைத்தான் பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியின் துணை இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆள முடியாது ஆட்சிக்கு வர முடியாது. 

தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியை நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். இதனை காங்கிரஸ் கட்சி பயன்படுத்த வேண்டும். தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி கால் ஊண்ட வேண்டும், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும். அப்போதுதான் காமராஜ் ஆட்சியை கொண்டுவர முடியும்

45

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு பெற வேண்டும், அதிகாரத்தில் இருந்தால் தான் காமராஜர் ஆட்சியை உருவாக்க முடியும். திமுகவிடமிருந்து காங்கிரஸ் கட்சி தங்களது உரிமையை கேட்டு பெற வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் ஆட்சி அதிகாரம் இல்லாத காரணமாக மக்களுக்கான எந்தவிதமான திட்டங்களும் செயல் படுத்த முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க வேண்டும், அதற்கு ஏற்றார் போல் எந்த கட்சியின் கூட்டணி அமைக்க வேண்டுமோ அதற்கு நாங்கள் செல்ல தயாராக உள்ளோம்.

55

எங்களுக்கு கட்சி தான் முக்கியம். காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டால் அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வி அடையும்.

திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் உயர்ந்து கொண்டு வருகிறது காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டாலும் எங்களது வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்ட முடியும் என பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories