கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் புது மாப்பிள்ளை செய்த வேலை! தப்பு பண்ணிட்டேனே கதறும் மனைவி! நடந்தது என்ன?

Published : Sep 25, 2025, 02:01 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் திருமணமான 20 நாட்களில், மனைவிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் மனைவியை அறைக்குள் பூட்டிவிட்டு, மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை.

PREV
14
திருமணம்

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 4-ம் தேதி ஜெயஸ்ரீ (25) என்பவருடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான முதலே கணவன் மனைவிக்கும் இடையே சிறு சிறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

24
கணவன் மனைவி இடையே தகராறு

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கார்த்திகேயன் தனது மனைவி ஜெயஸ்ரீயை வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ளே வைத்து விட்டு வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறைக்கு சென்றுள்ளார். பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கதவு தாழ்ப்பாள் போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயஸ்ரீ ஜன்னல் கதவைத் திறக்க கூறி அலறியடி சத்தம் போட்டுள்ளார்.

34
புது மாப்பிள்ளை விபரீத முடிவு

எதிர் வீட்டில் வசித்து வரும் கார்த்திகேயனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பதற்றத்துடன் வெளியே வந்துள்ளனர். அந்த நேரத்தில் செவ்வாப்பேட்டை போலீசார் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் போலீசார் மற்றும் கார்த்திகேயனின் பெற்றோர் மாடிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகேயன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்து பெற்றோர் மற்றும் மனைவி அதிர்ச்சியில் அலறியபடி கூச்சலிட்டு அழுது கதறினர்.

44
போலீஸ் விசாரணை

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க விரைந்த போலீசார் கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories