TN Teachers Diwali Advance: தமிழக அரசு அறிவித்த ரூ.20,000 தீபாவளி முன்பணம், நிதி ஒதுக்கீடு தாமதமானதால் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பண்டிகை முன்பணம் வழங்க நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி அவை விதி 110-ன் கீழ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றாக, பண்டிகை கால முன்பண உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் இதுவரை வழங்கப்பட்டு வரும் பண்டிகை கால முன்பணம் ரூ.10,000, இனி ரூ.20,000 உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
25
அரசு ஊழியர்கள்
மேலும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறுவது, அரசு ஊழியர்களின் குழந்தைகளின் திருமணத்திற்கு முன்பணம் ரூ.20,000லிருந்து 5 லட்சம் ஆக உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தனர். இதற்கான அரசாணை கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. தற்போது ஒரு சில அரசு துறைகளுக்கு மட்டும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.
35
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் களஞ்சியம் செயலியில் தீபாவளி முன்பணத்திற்காக 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இதுவரை தமிழக அரசின் நிதித்துறை சார்பில் இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டால் தான் தற்போது விண்ணப்பித்திருக்கும் ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணம் பெற முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரம் என்ற பழைய முன்பணம் தான் தற்போது ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசு அறிவித்தபடி 20 ஆயிரம் ரூபாய் என்ற புதிய அறிவிப்பின்படி முன்பணம் ஒதுக்கப்படவில்லை. இதனால் விண்ணப்பித்த அனைவருக்கும் இந்தாண்டு தீபாவளி முன்பணம் கிடைக்குமா கிடைக்காத என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக நாளிதழில் செய்திகளும் வெளியானது.
55
அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைக்கும்
இந்நிலையில் விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பண்டிகை முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக நிதித்துறை சார்பில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு, உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) அனுப்பிய சுற்றறிக்கையில் 'விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் தீபாவளி முன்பணம் பெறுவதற்கான 'பில்' தயார் செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது